தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நகை பட்டறையில் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 800 கிராம் தங்க காசுகள் கொள்ளை!

 

Advertisement

சென்னை: சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ் (34). இவர், யானைக்கவுனி, வெங்கட்ராயன் தெருவில் 'லக்கரம் கோல்டு ஸ்மித்' என்ற பெயரில் நகை பட்டறை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, இவரது கடைக்கு தங்க காசு வாங்குவதற்காக 2 நபர்கள் வந்துள்ளனர். அப்போது ஜெகதீஸ் நகைகளை காட்டி விட்டு, பட்டறையின் அறைக்குள் சென்று திரும்பி வந்தபோது, மர்ம நபர்கள் மயக்க மருந்தை ஜெகதீஸ் முகத்தில் அடித்து, தாக்கி உள்ளனர். இதில், ஜெகதீஸ் மயக்கமடைந்துள்ளார். பின், 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 800 கிராம் தங்க காசுகளை கொள்ளையடித்து, 'சிசிடிவி' கேமராக்களை அடித்து உடைத்து விட்டு, அதனுடைய 'டி.வி.ஆர்.,யும், கையுடன் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சில மணி நேரத்தில் மயக்கம் தெளிந்த ஜெகதீஸ், அதே தெருவில் உள்ள உறவினரான சேத்தன் கடைக்கு சென்றுள்ளார். அவர், ஜெகதீஸ் காயங்களுடன் இருப்பதை பார்த்து, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் யானைக்கவுனி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் பட்டறையில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

Advertisement