7 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை: தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:
இரா.கண்ணன் (கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறை இயக்குநர்) தமிழ்நாடு, மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளர் மற்றும் தமிழ்நாடு நீர்வடி பகுதி மேம்பாட்டு முகமையின் துணை தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
சா.ப.அம்ரித் (சென்னை, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்) கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ச.கவிதா (தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பொது மேலாளர்) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் இணை மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சி.முத்துக்குமரன் (தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை, இணை இயக்குநர் - பேரிடர் மேலாண்மை) தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பி.எஸ்.லீலா அலெக்ஸ் (தமிழ்நாடு மாநில தொழில் முன்னேற்ற நிறுவனம்-சிப்காட் பொது மேலாளர்) - சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனத்தின் உறுப்பினர் செயலர், சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மு.வீரப்பன் (சென்னை ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயம், ஆணையர்) சென்னை, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இரா.ரேவதி (தனி மாவட்ட வருவாய் அலுவலர்-நில எடுப்பு, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், திருநெல்வேலி) உயர்கல்வி துறை அரசு துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.