7 மீனவர்களுக்கு இலங்கை கோர்ட் ரூ.18.50 லட்சம் அபராதம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 9ம் தேதி டல்லஸ் (56), சிலைடன் (26), அருள் ராபர்ட் (53), லொய்லன் (45), பாஸ்கர் (45), ஜேசு ராஜா (32), ஆரோக்கிய சான்ரின் (20) ஆகிய 7 பேர் கடலுக்கு சென்றனர். மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை 7 மீனவர்களையும் கைது செய்து, வவுனியா சிறையில் அடைத்தது. இவர்களின் காவல் நேற்று முடிந்ததால் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி 6 மீனவர்களுக்கும் இலங்கை மதிப்பில் தலா ரூ.3 லட்சமும், ஒரு மீனவருக்கு ரூ.50 ஆயிரமும் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 7 மீனவர்கம் மொத்தமாக ரூ.18.50 லட்சம் அபராத தொகை செலுத்திய பிறகு விடுதலை செய்யப்படுவார்கள் என யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement