தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகனுக்கு அமைச்சர் பதவி வாங்கி கொடுத்ததால் பாஜக கூட்டணி கட்சியின் 7 தலைவர்கள் ராஜினாமா: ராஷ்டிரிய லோக் மோர்ச்சாவில் அதிருப்தி

பாட்னா: வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாகக் கூறி கட்சித் தலைவர் உபேந்திர குஷ்வாஹாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். பீகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்சி போட்டியிட்ட 6 தொகுதிகளில் நான்கில் வெற்றி பெற்றது. இதில் உபேந்திர குஷ்வாஹாவின் மனைவி சினேலதாவும் சசாரம் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார்.

Advertisement

உபேந்திர குஷ்வாஹா ஏற்கனவே மாநிலங்களவை எம்.பியாக இருக்கும் சூழலில், கூட்டணி தலைவர்களுடன் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி எம்எல்ஏவாக இல்லாத (எம்எல்சியாக தேர்வாக வாய்ப்பு) தனது மகன் தீபக் பிரகாஷை அமைச்சராக்கினார். கட்சியின் மூத்த தலைவர்களைப் புறக்கணித்துவிட்டு, தனது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிகாரத்தை குவித்து வருவது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாகக் கூறி கட்சியின் தேசியத் துணைத் தலைவர் ஜிதேந்திர நாத், மாநில பொதுச்செயலாளர் ராகுல் குமார் உள்ளிட்ட 7 முக்கிய நிர்வாகிகள் நேற்று கட்சியிலிருந்து கூண்டோடு விலகினர்.

கட்சிக்காக உழைத்தவர்களை விட்டுவிட்டு, சொந்த மகனுக்கு அமைச்சர் பதவி வழங்கியதைக் கண்டித்து அவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள உபேந்திர குஷ்வாஹா, ‘சிறிய கட்சிகளை உடைத்து எம்.எல்.ஏக்களை இழுக்கும் சூழல் நிலவுவதால், கட்சியின் எதிர்காலத்தைக் காப்பாற்றவும், கட்சியை கட்டுக் கோப்பாக வைத்திருக்கவும் இந்த முடிவு அவசியமானது மற்றும் தவிர்க்க முடியாதது’ என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் தனது மகன் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்றவர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Related News