வனப்பகுதிக்குள் கற்களை திருட முயன்ற 7 பேர் அதிரடி கைது
Advertisement
அப்போது, ஊட்டி தலை குந்தா பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (43), நாகராஜ் (32), சந்தோஷ் (31), ஈஸ்வரன் (34), கல்லட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் (49), ஆகியோர் வனப்பகுதிக்குள் கற்களை உடைத்தும், அங்கிருந்த மண்ணையும் எடுத்து செல்ல முயற்சித்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோன்று, எச்பிஎப் வனப்பகுதியில் கற்களை உடைத்த ஊட்டி வீசி காலனி பகுதியை சேர்ந்த பிரதீப் குமார் (32), காந்தல் பகுதியை சேர்ந்த அகமதுல்லா (32), ஆகியோரையும் வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களுடன் அத்துமீறி வனத்திற்குள் சென்று கற்களை உடைத்த மூன்று பேர் தப்பி விட்டனர். அவர்களையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
Advertisement