சென்னை விமானநிலையத்தில் 6 விமான புறப்பாடு தாமதம்
மீனம்பாக்கம்: சென்னை விமானநிலைய உள்நாட்டு முனையத்தில் இருந்து இன்று அதிகாலை ஒரு மணியளவில் டெல்லி செல்ல வேண்டிய ஏர்இந்தியா விமானம், சுமார் 6 மணி நேர தாமதமாக, காலை 6.50 மணியளவில் புறப்பட்டு சென்றது. அதேபோல், காலை 6 மணியளவில் ஐதராபாத் செல்ல வேண்டிய தனியார் ஏர்லைன்ஸ் விமானம், சுமார் மூன்றரை மணி நேர தாமதமாக காலை 9.30 மணியளவில் புறப்பட்டு சென்றது. மேலும், சென்னையில் இருந்து இன்று காலை 8 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய ஏர்இந்தியா விமானம், சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக காலை 9.30 மணிக்கும் காலை 8.50 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய ஏர்இந்தியா விமானம்,
சுமார் ஒரு மணி நேர தாமதமாக காலை 9.45 மணிக்கும் காலை 9.50 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய ஏர்இந்தியா விமானம், சுமார் 3 மணி நேர தாமதமாக மதியம் ஒரு மணிக்கும் புறப்பட்டு சென்றது. இதுதவிர, காலை 10.10 மணிக்கு தூத்துக்குடி செல்ல வேண்டிய தனியார் ஏர்லைன்ஸ விமானம், சுமார் 3 மணி நேர தாமதமாக மதியம் ஒரு மணிக்கு புறப்பட்டு சென்றது. சென்னையில் இருந்து இன்று மதியம் 12.55 மணியளவில் டெல்லி செல்ல வேண்டிய ஏர்இந்தியா விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.