68வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் கட்சியினர், பொதுமக்கள் மரியாதை
பரமக்குடி : பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில், 68வது ஆண்டு நினைவு நாளையொட்டி அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பரமக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் செப்.11ம் தேதி தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. நேற்று 68வது ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திமுக மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் திலீப்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்எம்டி அருளானந்த், பூமிநாதன், போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், முன்னாள் போகலூர் ஒன்றிய தலைவர் சத்யா குணசேகரன், ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குமரகுரு, பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா பாண்டியன், தென்காசி மாவட்ட செயலாளர் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, மானாமதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, சாயல்குடி இலந்தைகுளம் வழக்கறிஞர் அணி ஜெயபால், மாநில தீர்மான குழு துணை தலைவர் சுப.த.திவாகர், முன்னாள் எபி பவானி ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை வீரன், முன்னாள் அமைச்சர்கள் சுந்தரராஜன் அன்வர் ராஜா, எம்பி நவாஸ் கனி, மாவட்ட கலை இலக்கிய மன்ற செயலாளர் செந்தில் செல்வானந்த், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் முருகவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தேவேந்திர பண்பாட்டுக் கழகம் சார்பாக அதன் தலைவர் சக்கரவர்த்தி தலைமையில், செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் செல்வராணி உள்ளிட்ட துணைத் தலைவர் துணைச் செயலாளர் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உறுப்பினர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
புல்வாய் குளம் கிராமத்தின் சார்பாக கிராம தலைவர் குமரேசன் தலைமையில் மாணவர் நலமன்ற நிர்வாகிகள் கிராம பொதுமக்கள், மகளிர் மன்றத்தினர் பெருமாள் செவன் கபடி குழுவினர் திரளாக கலந்து கொண்டு மலர் வளைய வைத்து மரியாதை செலுத்தினர்.
தேவேந்திரர் இளைஞர் எழுச்சிப் பேரவையின் நிறுவன தலைவர் தளபதி ராஜ்குமார் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பொது செயலாளர் ஜி.கோபிராஜன், பரமக்குடி பொன்னையாபுரம் தேவேந்திர குல மகளிர் சங்கம் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 108 கிராம தேவேந்திர குலவேளாளர் மகாசபை பொறுப்பாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மதுரை மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை சங்கம் மற்றும் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் உரிமை மீட்பு இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் மானகிரி செல்வகுமார், கயல்விழி செல்வகுமார், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் வழக்கறிஞர் கண்ணன், வழக்கறிஞர் துரைமுருகன், வழக்கறிஞர் ராமதாஸ், பரமக்குடி கார்த்திகை சாமி, மதுரை கருப்புசாமி உள்ளிட்டோர் மலர் வளையும் வைத்து மரியாதை செலுத்தினர்.