துரை வைகோ முன்னிலையில் அமமுக கட்சியினர் 60 பேர் மதிமுகவில் இணைந்தனர்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட மதிமுக செயலாளர் நெமிலிச்சேரி மு.பாபு, எல்லாபுரம் ஒன்றிய முன்னாள்செயலாளர் பாலாஜி ஆகியோர் ஏற்பாட்டில், அமமுக எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் சுந்தர், துணை செயலாளர் கார்த்திக் ஆகியோர் தலைமையில், திருநிலை சிவகுமார், பாபு உள்பட சுமார் 60 பேர் அமமுகவில் இருந்து விலகி மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி முன்னிலையில் அந்த கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
Advertisement
இந்த நிகழ்வின்போது மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பி.டி.மணி, மாவட்ட பொருளாளர் பி.வி.தனஞ்செழியன், மாவட்ட துணை செயலாளர் கா.விஜயராகவன், சோழவரம் ஒன்றிய செயலாளர் சத்தியா, பூவை நகர் செயலாளர் இரா.சங்கர், ஒன்றிய பொருளாளர் தாங்கல் ரவி, பொதுக்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட பிரதிநிதிகள் சரவணன், தம்பி செல்வம் இருந்தனர்.
Advertisement