குமாரபாளையம் அருகே தரமற்ற உணவு வழங்கிய தனியார் பொறியியல் கல்லூரிக்கு 5 நாட்கள் விடுமுறை
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தரமற்ற உணவு வழங்கிய தனியார் பொறியியல் கல்லூரிக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. .கல்லூரி விடுதியில் கடந்த ஞாயிறன்று உணவு சாப்பிட்ட 60 மாணவர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து கல்லூரியில் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை நடத்தினர். சமையலறை முறையாக பராமரிக்கப்படாததால் சீல் வைத்த அதிகாரிகள், 21 விதிகளை நிறைவேற்ற உத்தரவிட்டனர்.
Advertisement