தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

4வது பல்லுயிர் பாரம்பரிய தளமானது நாகமலை குன்று: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: ஈரோடு மாவட்டத்திலுள்ள நாகமலை குன்றை மாநிலத்தின் 4வது உயிரியல் பாரம்பரிய தளமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

Advertisement

20 ராம்சார் தளங்களுடன், நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தளங்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மேலும், அழிந்து வரும் உயிரினங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பாதுகாப்பு நிதியை அமைத்துள்ளதுடன், சூழலியல் உணர்திறன் மிக்க பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. முக்கியமாக, பல்லுயிர் பாரம்பரிய தளம், பிஎம்எஸ் அந்தஸ்து, உள்ளூர் சமூகங்களின் பாரம்பரிய நடைமுறைகளையோ அல்லது வழக்கமான பயன்பாட்டை கட்டுப்படுத்தாது. மாறாக, இது சூழலியல் சமநிலையை மேம்படுத்துகிறது மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறது.

நாகமலை குன்று ஒரு சூழலியல் வளமிக்க இடமாகவும் மற்றும் இடம்பெயர்ந்து வரும் மற்றும் உள்ளூர் பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள், மற்றும் பல்வேறு ஈரநில சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஒரு முக்கிய வாழ்விடமாகவும் உள்ளது. அதன் நிலப்பரப்பில் உள்ள ஆழமான நீர்நிலைகள், ஆழமற்ற ஓரங்கள், சேற்று நிலங்கள் (மட்பிளாட்கள்) மற்றும் பாறைப் பகுதிகள் ஆகியவை வளமான பல்லுயிர்களை ஆதரிக்கின்றன. தமிழ்நாடு ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு (2024) நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, இங்கே 138 தாவர இனங்கள், 118 பறவை இனங்கள் (30 இடம்பெயரும் மற்றும் 88 உள்ளூர்), 7 பாலூட்டிகள், 11 ஊர்வனங்கள், 5 சிலந்திகள் மற்றும் 71 பூச்சியினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன.

இங்குள்ள முக்கிய உயிரினங்களில் பெரிய புள்ளிகள் கொண்ட கழுகு, வெளிறிய பூனைப் பருந்து மற்றும் பென்னெல்லிஸ் கழுகு ஆகியவை அடங்கும். தாவரங்களைப் பொறுத்தவரை 48 இனங்கள் மற்றும் 114 பேரினங்களின் கீழ் வரும் 138 தாவர இனங்கள் உள்ளன. இதில் 125 இருவித்திலைத் தாவரங்கள் மற்றும் 13 ஒருவித்திலைத் தாவரங்கள் அடங்கும். நாகமலை குன்று அதன் சூழலியல் மதிப்புடன் மட்டுமல்லாமல், குறிப்பிடத்தக்க தொல்லியல் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. இரும்புக் காலத்தைச் சேர்ந்த கற்குவை வட்டங்கள், பாறை மறைவிடங்கள் மற்றும் பழங்கால முக்கியத்துவம் வாய்ந்த கலைப்பொருட்கள் ஆகியவற்றின் சான்றுகள் அதன் வரலாற்று ஆழத்தை எடுத்துக்காட்டுகின்றன. தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் சுவாமி கல்வெட்டு ஒன்று அதன் கலாச்சார பாரம்பரியத்தை வலியுறுத்துகிறது.

எலத்தூர் பேரூராட்சி கடந்த ஜனவரி 22ம் தேதி அன்று இந்த அறிவிப்புக்கு ஆதரவான தீர்மானத்தை நிறைவேற்றியது. இது உள்ளூர் பாதுகாப்பு கொள்கைகள் வலுவாக இருப்பதை காட்டுகிறது. மாவட்ட ஆட்சியரும் ஜனவரி 28ம் தேதியிட்ட கடிதம் மூலம் இந்த அறிவிப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். நாகமலை குன்றை பல்லுயிர் பாரம்பரியத் தளமாக அறிவிப்பதன் மூலம், தமிழ்நாடு தனது பாதுகாப்பு மற்றும் நிலையான பாரம்பரிய நிர்வாகத்தில் உள்ள தலைமையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம், இந்த நிலப்பரப்பின் பல்லுயிர், சூழலியல் பங்கு மற்றும் கலாச்சார முக்கியத்துவம் ஆகியவை வருங்கால சந்ததியினருக்காக பாதுகாக்கப்படுகின்றன. நாகமலை குன்று நான்காவது பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது, தமிழ்நாட்டின் பல்லுயிர் பாதுகாப்புப் பயணத்தில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Related News