சிறுவன் உயிரிழந்த வழக்கில் 4 போலீசாருக்கு 11 ஆண்டு சிறை: மதுரை நீதிமன்றம் உத்தரவு
மதுரை: காவல் நிலைய விசாரணைக்கு சென்ற சிறுவன் உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர் உள்பட 4 போலீசாருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது. 2019ல் குற்ற வழக்கு தொடர்பான விசாரணைக்காக சிறுவன் கார்த்திக்(17) எஸ்.எஸ்.குடியிருப்பு காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். முத்துகார்த்திக்கை கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்து உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முத்து கார்த்திக் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். தனது மகன் இறப்புக்கு காரணமான மதுரை எஸ்எஸ் காலனி போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க தாயார் வழக்கு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று மதுரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது; சிறுவன் உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர் உள்பட 4 போலீசாருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். காவல் ஆய்வாளர் அலெக்ஸ் ராஜ் மற்றும் காவலர்கள் சதீஷ், ரவி, ரவிச்சந்திரன் ஆகிய நால்வருக்கும் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது. சாட்சிகளை அழிக்க முயன்ற காவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உடற்கூராய்வின் போது காயங்களை மறைத்த அரசு மருத்துவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.