தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்து கடவுள் ராமர் உருவப்படத்தை எரித்த 4 பேர் கைது

திருச்சி: இந்து கடவுள் ராமர் உருவப்படத்தை எரித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம், நவல்பட்டு கா.நி.சரகம், அயன்புத்தூர் கிராமத்தில் ஐந்தாம் தமிழ் சங்கம் (Regd.No.Book-4/360/2024) என்ற அமைப்பினரால் அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில் ஆசிவக திருமால் வழிகாட்டு விழா என்ற பெயரில் கடந்த 28ம் தேதி தேதி காலை 06.00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று மாலை 18.00 மணிக்கு நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 100 நபர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிய வருகிறது. அன்று இரவு மேற்படி சங்கத்தை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து இந்து கடவுளான ராமர் உருவப்படம் பொறிக்கப்பட்ட Flex Banner-ஐ செருப்பால் அடித்து, அதற்கு தீவைத்து கொளுத்தி அதன் காணொளியை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தது தெரியவந்தது.

Advertisement

இது தொடர்பாக, திருச்சி மாவட்டம் சமூக வலைத்தளம் மற்றும் ஊடகம் வழியாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை சம்மந்தமாக வரும் பதிவுகளை கண்காணித்து வரும் காவலர் சமூக வலைத்தளத்தை கண்காணித்து வந்த போது, கடந்த 30.09.2025-ம் தேதி முகநூல் தளத்தில் "ஐந்தாம் தமிழர் சங்கம்" என்ற ID-யில் http://www.facebook.com/100075827423075/videos/2009680083184655/?app=fbi Link-60 "இந்து கடவுள் ராமரின் உருவப்படம் (நிற்பது போல) உள்ள Flex Banner-ஐ வைக்கோல் வைத்து கட்டி செருப்பை கொண்டு அடித்தும், இராவணனே போற்றி இராவணனே போற்றி என கூறி ஒருவர் நெருப்பை வைத்து கொளுத்துவது போல வீடியோ பகிரப்பட்டிருந்தது.

மேலும், அந்த வீடியோவில் அச்சங்கத்தை சேர்ந்த நபர்கள் சுற்றியிருந்து உருவப்படத்தை எரிப்பது போலவும், வீடியோ முடிவில் பத்துதல பத்துதல என பாடலுடன் ராவண இந்திரனே போற்றி போற்றி என்றும், ஐந்தாம் தமிழர் சங்கத்தில் இணைய விரும்புவோர் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளவும் என 91 9597145588, 8870353835 என்ற எண்களும் டைப் செய்து பதிவிட்டுள்ளனர்.

மேற்படி நபர்கள் இந்து கடவுள் இராமரை அவமதிக்கும் உள்நோக்கத்தோடு சமூக வலைத்தளமான முகநூலில் வீடியோவை பதிவிட்டு பொது மக்களிடையே கலவரத்தை தூண்டி பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் பரப்பியுள்ள நபர்கள் மீதும் மற்றும் அவர்களுக்கு ஆதரவளித்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி, மேற்படி சமூக வலைத்தள கண்காணிப்பு காவலர் திரு.கார்த்திக் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், நேற்று சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண் 18/25 U/s 192, 196(1)(a), 197, 299, 302, 353(2) BNS வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேற்படி வழக்கின் குற்றவாளியான அடைக்கலராஜ், வயது 36, த. பெ. சங்கர், கதவு விலக்கம்: 7/6A, கவரப்பட்டி, இராஜாளிப்பட்டி அஞ்சல், விராலிமலை தாலுகா, புதுக்கோட்டை மாவட்டம் என்பவரை நேற்று (02.10.2025) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்று (03.10.2025) வழக்கின் மற்ற எதிரிகளான திலகேஸ்வரன் வயது 31, த.பெ ராஜலிங்கம், 2/125, தமிழர்தெரு, சித்தன்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டம் 2.நெப்போலியன் வயது 31, த.பெ காளியண்ணன், 6/83, அண்ணா நகர் காலனி, அத்தனூர், இராசிபுரம், நாமக்கல் மாவட்டம் மற்றும் 3.வசந்தகுமார் வயது 28, த.பெ சரவணன், 38/8, மேற்குதெரு, நெடுமானூர், சங்கராபுரம் தாலுக்கா, கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

வழக்கு புலன் விசாரணையில் இருந்து வரும் நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் எவரேனும் அறியப்பட்டால் அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இதுபோன்று, சமூக வலைத்தளங்களில் பொது மக்களிடையே கலவரத்தை தூண்டி பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் பதிவுகளை பதிவு செய்தாலோ, பகிர்ந்தாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், எச்சரித்துள்ளார்கள்.

Advertisement