41 பேர் பலி குறித்து முழு விபரம் தெரியாமல் எதுவும் சொல்லமுடியாது; ஓபிஎஸ் நழுவல்
போடி: தேனி மாவட்டம், போடியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கரூரில் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும். அந்த விசாரணை அறிக்கை வந்த பின்னர் கருத்து தெரிவிக்கிறேன். முழு விவரம் தெரியாமல் எதையும் கூற முடியாது. இலவம் பஞ்சு மெத்தை தலையணைகளுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதமாக உயர்த்தியது தொடர்பாக ஒன்றிய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். இதுகுறித்து சட்டமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படும். இவ்வாறு கூறினார்.
Advertisement
Advertisement