3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டுக்கான மருத்துவத்துறை நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த மேரி ப்ராங்கோ, பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானை சேர்ந்த ஷிமோன் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றது. 2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாக தொடங்கிவிட்டன. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேவின் ஓஸ்லோவிலும், மற்ற துறைகளுக்கான பரிசுகள் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படுவது வழக்கமாகும். 2025ம் ஆண்டுக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை அமெரிக்காவை சேர்ந்த மேரி ப்ரங்கோ, பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானை சேர்ந்த ஷிமோன் ஷஹகுச்சி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றது. உடலின் சொந்த செல்களை நோய் எதிர்ப்பு சக்தி தாக்காமல் தடுக்கும் முறை குறித்த கண்டுபிடிப்பிற்காக இந்த நோபல் பரிசு வழங்கப்படடுள்ளது.