ஆஸி மகளிருடன் 3 ஓடிஐ சென்னை போட்டிகள் சண்டிகருக்கு மாற்றம்: பிசிசிஐ திடீர் அறிவிப்பு
மேலும், அக்டோபர் மாதம் கொல்கத்தாவில் நடைபெறவிருந்த இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2வது டெஸ்ட் புதுடெல்லி அருண் ஜெட்லி அரங்கிற்கு மாற்றப்படுகிறது. அதற்கு பதிலாக நவம்பர் மாதம் நடைபெற உள்ள இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையிலான முதல் டெஸ்ட், கொல்கத்தாவில் நடைபெறும். பெங்களூரில் நடைபெற இருந்த தென் ஆப்ரிக்கா - இந்தியா ஏ அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் குஜராத்தின் ராஜ்கோட்டுக்கு மாற்றப்படுகிறது.