3 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்து பெண் தற்கொலை
வல்லம்: தஞ்சாவூர் பூச்சந்தை அருகே கல்லணை கால்வாயில் 20 கண் பாலத்தில் நேற்று மதியம் பெண் ஒருவர், 3 குழந்தைகளுடன் நடந்து சென்றார். திடீரென அவர், 3 குழந்தைகளுடன் கல்லணை கால்வாயில் குதித்தார். படித்துறையில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் பார்த்து ஆற்றில் குதித்து 4 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் பெண், சிறுவன், சிறுமி ஆகியோரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். நீரில் மூழ்கியதால் மூச்சு திணறி 3 பேரும் உயிரிழந்தனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கைக்குழந்தையை மட்டும் மீட்க முடிய வில்லை. இறந்த பெண்ணுக்கு 30வயது, சிறுவனுக்கு 5வயது, சிறுமிக்கு 14வயது என தெரிய வந்தது. அவர்கள் விவரம் தெரியவில்லை.
Advertisement
Advertisement