தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இளம்பெண்ணை நடிக்க வைத்து ‘உல்லாச’ வீடியோ எடுத்து பணம் பறித்த 3 பேர் கைது

அவிநாசி: அவிநாசி அருகே பெருமாநல்லூரில் இளம்பெண், வாலிபருடன் உல்லாசமாக இருப்பது போல் நடித்தார். இதை வீடியோ எடுத்து மிரட்டி வாலிபரிடம் 2 பேர் நகை, பணம் பறித்தனர். இவ் வழக்கில் இளம்பெண் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பெருமாநல்லூரை சேர்ந்தவர் கிருத்திகா (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஈரோடு மாவட்டம், அரச்சலூர் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (27). இருவருக்கும் பஸ் பயணத்தில் பழக்கம் ஏற்பட்டு போனில் அடிக்கடி பேசி வந்தனர்.

இந்நிலையில் கிருத்திகா, இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி ஜெகதீசனை நேரில் வரச்சொல்லி உள்ளார். இதையடுத்து ஜெகதீசன் பெருமாநல்லூர் அருகே உள்ள தட்டாங்கோட்டை சொட்டமேடு என்ற பகுதிக்கு வந்தார். அங்கு காத்திருந்த கிருத்திகா, ஜெகதீசனை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பிறகு இருவரும் நெருக்கமாக இருந்தனர். அப்போது 2 பேர் திடீரென வீட்டில் நுழைந்து இருவரும் உல்லாசமாக இருந்ததை போட்டோ மற்றும் வீடியோ எடுத்ததாகவும், அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உறவினர்களிடம் கூறுவோம், இதை செய்யாமல் இருக்க பணம் தரவேண்டும் என மிரட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெகதீசன் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க செயினையும், கையில் வைத்திருந்த பணத்தையும் அவர்களிடம் கொடுத்தார்.

உடனடியாக இருவரும் கிருத்திகாவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து வேகமாக தப்பிசென்றனர். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசில் ஜெகதீசன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில் தர்மபுரியை சேர்ந்த அருண் (33), ஈரோட்டை சேர்ந்த பழனிச்சாமி(51) ஆகிய இருவரும், பட்டதாரி இளம் பெண்ணான கிருத்திகாவை ஜெகதீசனுடன் தனிமையில் இருக்குமாறு நடிக்க வைத்து அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்தது. இதையடுத்து பழனிச்சாமி, அருண், கிருத்திகா ஆகிய மூவரையும் போலீசார் நேற்று இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.