அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் 3,768 நெல் மூட்டைகள் குவிந்தது
*606 ரக நெல் ரூ.2,100க்கு விற்பனை
ராணிப்பேட்டை : அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று ஒரே நாளில் 3,768 நெல் மூட்டைகள் குவிந்தது. அதில் 606 ரக நெல் அதிகபட்ச விலையாக ரூ.2,100க்கு விற்பனை ஆனது.
அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் நேற்று 3,768 நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதில் 606 ரக நெல் அதிகபட்ச விலையாக ரூ.2,100க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் நேற்றைய 75 கிலோ நெல் மூட்டைகளின் விற்பனை விலை விவரம் பின்வருமாறு: ஏடிடி 37 ரக குண்டு நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1,219க்கும், அதிகபட்ச விலையாக ரூ.1,650க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதபோல் கோ 51 ரக நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1,169க்கும், அதிகபட்ச விலையாக ரூ.1,512க்கும், கோ-54 ரக நெல் குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,611க்கும், 1010 ரக நெல் குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,419க்கும், 606 ரக நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1,229க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2,100க்கும், அமோகா ரக நெல் குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,800க்கும், நர்மதா ரக நெல் குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,796க்கும் விற்பனையானது.
விவசாயிகள் எடுத்து வரும் நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வங்கியில் பணம் செலுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகள்ள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விவசாயிகள் சோளம், கம்பு, உளுந்து, கேழ்வரகு, தேங்காய் கொப்பரை, நிலக்கடலை, எள்ளு ஆகிய பயிர்களையும் அறுவடை செய்து அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வர வேண்டும் என அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் சே.ராமமூர்த்தி தெரிவித்தார்.