பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி தர்மபுரியில் 35 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி
*எஸ்பி ஆபீசில் பாதிக்கப்பட்டவர்கள் மனு
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த மண்ணேரியை சேர்ந்த முத்துலட்சுமி உள்ளிட்டோர், மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் மண்ணேரி பகுதியில் வசித்து வருகிறோம்.
கடந்த 2024ம் ஆண்டு, எங்கள் பகுதியை சேர்ந்த 2 பேர், எங்களை தொடர்பு கொண்டு, தாங்கள் நிதி நிறுவனம் நடத்தி வருகிறோம். வங்கியில் கடன் பெற்று, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால், முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக வழங்குவதாக ஆசைவார்த்தை கூறினர்.
மேலும், வங்கியில் வாங்கிய கடனை அவர்களின் நிறுவனம் சார்பாக செலுத்தி விடுவதாகவும், பெண்களுக்கு பல சலுகைகள் உள்ளது என்றும் கூறினர். இதை நம்பி நாங்கள் 35 பேர், வங்கியில் ரூ.60 லட்சம் கடன் வாங்கி, அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தோம். பல மாதங்கள் கடந்த நிலையில், கூறியபடி எங்களுக்கு பணம் வழங்கவில்லை.
வங்கியில் நாங்கள் பெற்ற கடனை செலுத்தவும் இல்லை. அவர்கள் எங்களை மோசடி செய்ததால், வங்கி நிர்வாகம், எங்களது தனிப்பட்ட வங்கி கணக்கை முடக்கியது. மேலும், கடன் தொகையை செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால், வங்கியில் உள்ள இதர பணத்தையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எங்களிடம் மோசடி செய்தவர்களையும், அவர்களுக்கு ஜாமீன் கையொப்பமிட்ட தர்மபுரியை சேர்ந்தவரையும் பிடித்து, எங்களது பணம் ரூ.60 லட்சத்தை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்தர்மபுரி, அக்.24: தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த மண்ணேரியை சேர்ந்த முத்துலட்சுமி உள்ளிட்டோர், மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாங்கள் மண்ணேரி பகுதியில் வசித்து வருகிறோம். கடந்த 2024ம் ஆண்டு, எங்கள் பகுதியை சேர்ந்த 2 பேர், எங்களை தொடர்பு கொண்டு, தாங்கள் நிதி நிறுவனம் நடத்தி வருகிறோம்.
வங்கியில் கடன் பெற்று, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால், முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக வழங்குவதாக ஆசைவார்த்தை கூறினர். மேலும், வங்கியில் வாங்கிய கடனை அவர்களின் நிறுவனம் சார்பாக செலுத்தி விடுவதாகவும், பெண்களுக்கு பல சலுகைகள் உள்ளது என்றும் கூறினர். இதை நம்பி நாங்கள் 35 பேர், வங்கியில் ரூ.60 லட்சம் கடன் வாங்கி, அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தோம். பல மாதங்கள் கடந்த நிலையில், கூறியபடி எங்களுக்கு பணம் வழங்கவில்லை.
வங்கியில் நாங்கள் பெற்ற கடனை செலுத்தவும் இல்லை. அவர்கள் எங்களை மோசடி செய்ததால், வங்கி நிர்வாகம், எங்களது தனிப்பட்ட வங்கி கணக்கை முடக்கியது. மேலும், கடன் தொகையை செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனால், வங்கியில் உள்ள இதர பணத்தையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எங்களிடம் மோசடி செய்தவர்களையும், அவர்களுக்கு ஜாமீன் கையொப்பமிட்ட தர்மபுரியை சேர்ந்தவரையும் பிடித்து, எங்களது பணம் ரூ.60 லட்சத்தை மீட்டு தரவேண்டும். இவ்வாறு மனுவில்
கூறியுள்ளனர்.