32 பரிந்துரைகளுடன் புதிய வருமான வரி மசோதா தேர்வுக்குழு அறிக்கை தாக்கல்
Advertisement
பாஜ எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான 31 பேர் கொண்ட தேர்வுக்குழு ஆய்வு செய்து, 4,575 பக்க அறிக்கையை மக்களவையில் நேற்று தாக்கல் செய்தது.
இதில், பழைய சட்டத்தில் இருந்து புதிய மசோதாவில் மாற்றம் செய்யப்பட்ட 32 திருத்தங்களை மீண்டும் பழையபடியே மாற்றியமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தனிநபர் வரி செலுத்துவோர் டிடிஎஸ் பணத்தை திரும்பப் பெறும் போது, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ரிட்டன் தாக்கல் செய்யாததற்காக அபராதம் செலுத்த வேண்டிய திருத்தம் புதிய மசோதாவில் சேர்க்கப்பட்டிருந்தது. இதை நீக்க தேர்வுக்குழு பரிந்துரைத்துள்ளது. மேலும், தொண்டு நிறுவனங்கள் பெறும் நன்கொடைகளுக்கு 30 சதவீதம் வரி விதிப்பு புதிய மசோதாவில் சேர்க்கப்பட்டிருந்தது. இதற்கு முழு வரி விலக்கு அளிக்க குழு பரிந்துரைத்துள்ளது.
Advertisement