வீடூர் அணையில் இருந்து பாசனத்திற்காக 135 நாட்களுக்கு 328.560 மில்லியன் கன அடி நீர் திறப்பு
Advertisement
திண்டிவனம்: திண்டிவனம் அருகே வீடூர் அணையில் இருந்து பாசனத்திற்காக 135 நாட்களுக்கு 328.560 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படுகிறது. வீடூர் அணையில் இருந்து இன்று முதல் அடுத்த ஆண்டு ஏப்.2 வரை 135 நாட்களுக்கு நீர் திறக்கப்படுகிறது. அணை திறப்பு மூலம் திண்டிவனம், வானூர் வட்டப் பகுதிகளில் 3,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.
Advertisement