சிறுமலையில் கேளையாடு வேட்டையாடிய 3 பேர் கைது
*2 துப்பாக்கிகள் பறிமுதல்
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சிறுமலை வனப்பகுதியில் கேளையாடு வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யபப்பட்டன.
திண்டுக்கல் அருகே சிறுமலை வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக வன அலுவலர் யோகேஷ் குமார் மீனாவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறுமலை வனச்சரக அலுவலர் பாஸ்கர் தலைமையில், மலையூர், தவசிமடை கிராமங்களில் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, கேளையாடு வேட்டையாடி சமைப்பதற்காக வைத்து இருந்த தவசிமடை பகுதியை சேர்ந்த பெருமாள், செங்குறிச்சியை சேர்ந்த ஆண்டிச்சாமி, கார்த்திக் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த 2 நாட்டு துப்பாக்கிகள், கேளையாடு கறி மற்றும் சமைக்க வைத்திருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து வனத்துறையினர், 3 பேரையும் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர்.நீதிபதி, 3 பேரையும் நவ.27ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.