2வது ரயில் தயாரானதும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அக்டோபர் 15ல் அறிமுகம்? ஒன்றிய அமைச்சர் தகவல்
Advertisement
புதுடெல்லி: ரயில்வே திட்டப்பணிகள் குறித்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவைக்காக ஷகுர் பஸ்தி ரயில் பெட்டி தொழிற்சாலை கிடங்கில் ஏற்கனவே ஒரு ரயில் தயாரிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளது. தற்போது 2வது ரயில் தயாரிக்கப்பட்டு பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன.
வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் 2வது ரயில் தயாராகிவிடும். வழக்கமான சேவையை பராமரிக்க குறைந்தபட்சம் 2 ரயில்கள் தேவை. அதனால் 2வது ரயிலுக்காக காத்திருக்கிறோம். அதை பெற்றதும், எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பது முடிவு செய்யப்பட்டு, 2 ரயில்களும் சேர்த்து, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை அறிமுகம் செய்யப்படும்’’ என்றார்.
தற்போது சேவையில் உள்ள வந்தே பாரத் ரயில்களில் இருக்கை வசதி மட்டுமே உள்ளன.
Advertisement