தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் 6 மாதமாக 275 அதிகாரிகள் காத்திருப்பு: பதிவுத்துறை ஐஜியிடம் ஊழியர் சங்கங்கள் நேரடி குற்றச்சாட்டு

 

Advertisement

சென்னை: பதிவுத்துறையில் கடந்த 6 மாதத்திற்கு மேல் 275 அதிகாரிகள் சஸ்பெண்டில் உள்ளதால் அவர்களது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், பணிகளில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் என்று சார்பதிவாளர் சங்க நிர்வாகிகள், அத்துறையின் ஐஜியிடம் புகார் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் 585 பதிவுத்துறை அலுவலகங்கள் உள்ளன. அதில் 4 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். தினமும் சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் 30 ஆயிரம் பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதன் மூலம் அரசுக்கு மட்டும் தினமும் ரூ.300 கோடி வருவாய் கிடைக்கிறது. இதனால் ஆண்டுக்கு அரசுக்கு 95 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பதிவுத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மீது சாதாரண குற்றத்திற்காக சஸ்பெண்ட் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ரூ.2 ஆயிரம் கையில் வைத்திருந்த டிஐஜி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின் அவர் மீது குற்றம் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. அது அவரது பணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் இருந்த செயலாளர், குற்றம் செய்ததற்கான பலனை டிஐஜி வழங்கி, அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தியதற்காக குன்றத்தூர் சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது போன்று சிறிய சிறிய நிர்வாக தவறுகளுக்காக பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இப்படி 275 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஒரு அரசு ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு 6 மாதம் ஆகிவிட்டால், அவரை மீண்டும் பணியில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அரசு விதியில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறுதான் பல்வேறு துறைகளிலும் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு பணிகளில் எடுக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் பதிவுத்துறையில் மட்டும் சிறிய சிறிய நிர்வாக தவறுகளுக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டு 6 மாதத்திற்கு மேல் ஆனவர்கள் மீண்டும் பணியில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் பதிவுத்துறையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் சில மாதங்களிலேயே பணியில் எடுத்துக் கொள்ளப்பட்டு சேர்க்கப்படுகின்றனர். இதனால், இதுகுறித்து சார்பதிவாளர் சங்கங்களில் பல்வேறு உறுப்பினர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து சென்னை சாந்தோமில் உள்ள பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சார்பதிவாளர் அலுவலக சங்க உறுப்பினர்கள் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினர். அப்போது சார்பதிவாளர்களின் குறைகளை எடுத்துக் கூறினர். மேலும், சார்பதிவாளர் சங்க நிர்வாகிகள் ஐஜியிடம் ஒரு மனு அளித்துள்ளனர். அப்போது சங்க நிர்வாகிகளை பதிவுத்துறை ஐஜி திட்டியதோடு, அறையை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பதிவுத்துறை ஊழியர்கள் கூறியதாவது: கடந்த மாதம் 27ம் தேதி திருச்சியில் நடந்த மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து கோரிக்கைகள் வலியுறுத்திடவும் செயற்குழு தீர்மானங்களை வழங்கிடவும் திட்டமிட்டு முன் அனுமதி பெற்று சந்தித்து பேசினோம். அப்போது கடந்த மூன்று ஆண்டுகளாக பதிவுத்துறையில் உள்ள பணியாளர்களுக்கு பொது மாறுதல் மூலம் பணியிட மாற்றம், பணியிடை நீக்கத்தில் உள்ள பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை சங்கத்தின் மூலம் பலமுறை நேரில் அளித்து வலியுறுத்தினோம்.

அவ்வாறு கடந்த ஜூலை மாதத்திற்குள் பொது மாறுதல், பணியிட நீக்கம், பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக பதிவுத்துறை தலைவரான நீங்கள் வாக்குறுதி அளித்து இருந்தீர்கள். ஆனால் அவ்வாறு நிறைவேற்றவில்லையே என்று கேட்டோம். அதுகுறித்து எந்த பதிலும் அளிக்காமல் தற்போது தானே 21 பேருக்கு பணியிட மாற்றம் வழங்கினேன் என்று பதிவுத்துறை தலைவர் கூறினார். அதற்கு நாங்கள் பொது மாறுதல் மூலம் அனைவருக்கும் பணி இடமாற்றம் வழங்க வேண்டும் என்று தானே கேட்கிறோம். பணியிட மாற்றத்திற்காக 400க்கும் மேற்பட்டோர் காத்திருக்கும் நிலையில் 21 பேருக்கு மட்டும் பணியிட மாற்றம் வழங்கியுள்ளது ஏற்புடையதாக இல்லை. பணியிடை நீக்கத்தில் உள்ள பணியாளர்களை அரசாணையின்படி பிற துறைகளில் உரிய காலத்திற்குள் விசாரணை செய்து மீண்டும் பணி வழங்கியுள்ள நிலையில் பதிவுத்துறையில் மட்டும் 275 பேர் பணியிடை நீக்கத்திலேயே உள்ள நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை சுட்டிக் காட்டினோம். அதற்கு நேரடியாக ஐஜி பதில் அளிக்காமல் சங்க நிர்வாகி ஒருவரை பார்த்து, நீங்கள் பேசக்கூடாது என்றார். அவரும் சங்க நிர்வாகிதான். அவரை பேச கூடாது என்று சொல்லக்கூடாது சார், அவர் சங்க நிர்வாகி என்ற முறையில் கேட்கிறார் என்று மற்ற சங்க நிர்வாகிகள் கூறினோம்.

மேலும் தகுதி காண் பருவம் நிறைவு செய்வதற்கு மூன்றாம் மொழி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று உள்ளதை ரத்து செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், தகுதி காண் பருவம் நிறைவு செய்த ஆணை பிறப்பிக்கப்படாமல் நீண்ட காலமாக உள்ளது எதனால் என்றும் கேட்டபோது, நமது கோரிக்கைகளை நிறைவேற்றுவது பற்றி பதில் அளிக்காமல் மடை மாற்றம் செய்யும் வகையில் சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இரண்டு பதிவு அலுவலர்களுக்காக கருப்பு பேட்ஜ் அணிந்து போராடியது ஏன் என்று பதிவுத்துறை தலைவர் கேட்டார். அதற்கு நாங்கள் அவர்கள் சட்டப்படிதானே செயல்பட்டுள்ளோம். அதில், என்ன தவறு. போராடியவர்கள் என்ன செய்தனர் என்று கூறுங்கள்? என கேட்டதற்கு உங்கள் துறை பணியாளர்களை பற்றி பொது வெளியில் தவறாக தானே பேசுகிறார்கள் என்று ஐஜி கூறினார்.

பதிவு அலுவலகங்களில் சார் பதிவாளர்களுக்கு பதிலாக உதவியாளர்களை நியமித்து பதிவு பணி மேற்கொண்டு வருவது ஏன்? தவறான சுற்றறிக்கைகள் வாய்மொழி உத்தரவு இது போன்ற தங்களின் நிர்வாக சீர்கேடுகளால் தான் இவ்வாறு உள்ளது என்று சங்க நிர்வாகிகள் பதில் கூறினோம். அப்போது உங்களிடம் பேச முடியாது என பதிவுத்துறை தலைவர் கூறினார். அதற்கு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது சம்பந்தமாக பேசாவிட்டால் பணியாளர்களை திரட்டி போராடுவதை தவிர வேறு வழியில்லை என்று கூறிவிட்டு வெளியே வந்தோம். எங்கள் கோரிக்கை நிறைவேறா விட்டால் போராட்டத்துக்கு தள்ளப்படுவோம். இவ்வாறு கூறினர்.

 

Advertisement

Related News