ஓணம் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் 272 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை!
Advertisement
தூத்துக்குடி: ஓணம் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் 272 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் சுழற்சி முறையில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்று வருகிறார்கள்.
இந்நிலையில், கேரள மாநில மக்கள் வாழும் பல்வேறு இடங்களில் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நேற்று (செப்டம்பர் 4) மற்றும் இன்று (செப்டம்பர் 5) ஆகிய 2 நாட்கள் தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 272 விசைப்படகுகள் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Advertisement