24 மணி, 48 மணி நேர ஸ்பீட் போஸ்ட் சேவை வரும் ஜனவரி 1ம் தேதி அறிமுகம்
புதுடெல்லி: வரும் ஜனவரி முதல் 24 மணி நேரம் மற்றும் 48 மணி நேர காலக்கெடுவுடன் கூடிய உத்தரவாத அடிப்படையில் தபால்கள், பார்சல் சேவை அறிமுகப்படுத்தப்படும் என ஒன்றிய அமைச்சர் ஜோதிராதி்த்யா சிந்தியா தெரிவித்தார். ஒன்றிய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதி்த்யா சிந்தியா நேற்று கூறுகையில்,‘‘ தபால்கள் மற்றும் பார்சல்களை உத்தரவாதமாக டெலிவரி செய்யும் புதிய தயாரிப்புகளை நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம். நாடு முழுவதும், 24 மணிநேரம், 48 நேரத்தில் டெலிவரி காலக்கெடுவுடன் தபால் சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரம் மற்றும் 48 மணி நேரத்துக்குள் உரியவரிடம் தபால்கள், பார்சல்கள் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யும் இருவகை ஸ்பீட் போஸ்ட் சேவை வரும் ஜனவரி 1ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது’’ என்றார்.
Advertisement
Advertisement