தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 ஏரிகள் முழுகொள்ளளவை எட்டின: திருவள்ளூரில் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது

 

Advertisement

காஞ்சிபுரம்: வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது என வானிலை மையம் அறிவித்த நிலையில், 4 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், பெரும்புதூர் குன்றத்தூர், உத்திரமேரூர் வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாதா கோயில் தெரு, தாமல்வார் தெரு, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு, ரங்கசாமி குளம், இரட்டை மண்டபம், பெரியார்நகர், விளக்கடி பெருமாள் கோயில் தெரு போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பாதசாரிகள். வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகளில் தாமல் மதகுஏரி, தாமல் சக்கரவர்த்தி தாங்கல் ஏரி, தைப்பாக்கம் ஏரி, கூரம்சித்தேரி, கோவிந்தவாடி சித்தேரி, திருப்புக்குழி ஏரி, திருப்புலிவனம் ஏரி, இளநகர் ஏரி, அனுமன் தண்டலம் ஏரி, சிருங்கோழி ஏரி, காவனூர் புதுச்சேரி ஏரி, மருத்துவம்பாடி ஏரி, கோவிந்தவாடி பெரியஏரி ஆகிய 14 சிறிய ஏரிகளும், பெரிய ஏரிகளான தாமல், உத்திரமேரூர் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 16 ஏரிகள் நிரம்பியுள்ளது. இதில், 44 ஏரிகள் 75 சதவீதமும், 118 ஏரிகள் 50 சதவீதமும், 178 ஏரிகள் சதவீதமும் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன. குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் பெரிய ஏரிகளான தாமல் ஏரி 2307 ஏக்கரில் விவசாய நீர் பாசனம் செய்யக்கூடியது.

இதுபோல் தென்னேரி 5858 ஏக்கரில் நீர்பாசமும், உத்திரமேரூர் ஏரி 5636 ஏக்கரில் நீர் பாசனமும், பெரும்புதூர் ஏரி 1423 ஏக்கரில் நீர் பாசனமும், பிள்ளைப்பாக்கம் ஏரி 121.84 ஏக்கரில் நீர்பாசனமும், மணிமங்கலம் ஏரி 2079 ஏக்கரில் விவசாய நிலங்களுக்கு நீர் பாசனமும் செய்யக்கூடியது. இந்த ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தாமல், உத்திரமேரூர் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. மாவட்ட மழை அளவு: காஞ்சிபுரம் 47.40, உத்திரமேரூர் 82.90, வாலாஜாபாத் 117.60, பெரும்புதூர் 88.40 குன்றத்தூர் 38.50, செம்பரம்பாக்கம் 72.40 மில்லி மீட்டர் அளவில் மழை பதிவாகியுள்ளது.

திருவள்ளூர்

மழையின் காரணமாக சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர் தேக்கங்கள் நிரம்பி வருகிறது. அதன்படி இன்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2536 மி.கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 2910 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 2387 கன அடியாகவும் உள்ளது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 458 மி.கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 645 கன அடியாக உள்ளது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மி.கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2745 மி.கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 860 கன அடியாகவும், சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 184 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

கண்ணன்கோட்டை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 430 மி. கன அடியாக உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 90 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மி.கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2815 மி.கன அடியாக உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 2170 கன அடியாகவும், சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 162 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மொத்தத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மொத்தக் கொள்ளளவான 11757 மில்லியன் கன அடியில் தற்போது 8984 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரி தெரிவித்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரிய ஏரிகளான மதுராந்தகம், செங்கல்பட்டு, கொளவாய், திருப்போரூர், கொண்டங்கி ஏரி, மானாம்பதி ஏரி, பாலூர் ஏரி, பொன்விளைந்தகளத்தூர் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று இரவு பெய்த கனமழையால் மாமல்லபுரம், திருப்போரூர், கேளம்பாக்கம், செய்யூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதி சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 528 ஏரிகளில் 4 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதில், 27 ஏரிகள் 75 சதவீதமும், 138 ஏரிகள் 60%, 243 ஏரிகள் 50%, 114 ஏரிகள் 25 சதவீதம் நிரம்பியுள்ளது.

மாமல்லபுரத்தில் 82 மிமீ, மதுராந்தகத்தில் 98.20 மிமீ, திருக்கழுக்குன்றத்தில் 76 மிமீ மழை பதிவாகியுள்ளது. வெள்ளை சேதங்களை பார்வையிடவும், நிவாரண பணிகளில் ஈடுபடவும் கலெக்டர் சினேகா, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், சார் ஆட்சியர் மாலதிஎலன் அடங்கிய கண்காணிப்பு குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை சார்பில், ஊரக வளர்ச்சிதுறை இயக்குனர் தேவி தலைமையில் அந்தந்த ஊராட்சிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள ஊராட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பாலாற்று பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாலாற்றை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு போதுமான நிலத்தடி நீர் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement