தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் 16 தேதி முதல் நான்கு நாட்களுக்கு 20, 208 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் 16-ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு சென்னையில் இருந்து 14, 208 சிறப்பு பேருந்துகள் இயக்கபடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிற பகுதிகளில் இருந்து 6000 சிறப்பு பேருந்துகள் இயக்கபட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி முடிந்து ஊர் திரும்ப ஏதுவாக 3 நாட்களில் 10, 529 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படஇருக்கிறது. சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோரின் வசதிக்காக 20, 208 சிறப்பு பேருந்துகள் மொத்தமாக இயக்கப்படயிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப ஒருக்கு வசதியாகவும் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், தாம்பரம், பெருங்களத்தூர் சாலையைத் தவிர்த்து, பழைய மாமல்லபுரம் சாலை திருப்போரூர், செங்கல்பட்டு வழியாகவே அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாகவே செல்லலாம் இதனால் நெரிசல் தவிர்க்கப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.