2027 சட்டமன்ற தேர்தலால் பிரதமர் மோடிக்கு மணிப்பூர் நினைவுக்கு வந்துவிட்டது: கனிமொழி எம்பி விமர்சனம்
சென்னை: 2027 சட்டமன்றத் தேர்தலால் பிரதமர் மோடிக்கு மணிப்பூர் நினைவுக்கு வந்துவிட்டது என்று கனிமொழி எம்பி விமர்சித்துள்ளார். திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இறுதியாக இந்திய பிரதமர் மணிப்பூருக்குச் செல்ல முடிவு செய்துள்ளார் என்பதை நான் கவனிக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த மாநிலம் எரிந்து கொண்டிருக்கிறது. இரக்கம் வெளிப்படையாக தோல்வியடைந்துள்ளது. ஆனால், 2027 சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள், அவருக்கு மணிப்பூர் நினைவுக்கு வந்து விட்டதாகச் சொல்லலாம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement