தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2027ம் ஆண்டில் நடக்க உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு அரசிதழ் அறிவிப்பு வெளியீடு

புதுடெல்லி: வரும் 2027ம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய 16வது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசிதழ் அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2021ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டி இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. தற்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு, மக்கள்தொகை கணக்கெடுப்பு வரும் 2027ம் ஆண்டில் நடத்தப்படும் என கடந்த 4ம் தேதி ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
Advertisement

இந்நிலையில், நாட்டின் 16வது மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து அதிகாரப்பூர்வ அரசிதழ் அறிவிப்பை ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டது. இதில், ‘16வது மக்கள்தொகை கணக்கெடுப்பு 2 கட்டமாக நடத்தப்படும். முதல் கட்டமாக, லடாக், காஷ்மீர், இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பனிப்பகுதிகளில் 2026 அக்டோபர் 1ம் தேதியும், 2ம் கட்டமாக நாட்டின் பிற பகுதிகளில் 2027 மார்ச் 1ம் தேதியும் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்படும். மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும். மொத்தம் 34 லட்சம் அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட 1.3 லட்சம் பேர் அதிநவீன டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி கணக்கெடுப்பை மேற்கொள்வார்கள். மக்களுக்கு சுய கணக்கெடுப்பு வசதிகளும் வழங்கப்படும். முதலில், ஒவ்வொரு குடும்பத்தின் வீடுகளின் நிலை, சொத்துகள், வசதிகள் குறித்து கணக்கெடுக்கப்படும், அதன் பின் மக்கள்தொகை கணக்கிடப்படும். சுதந்திரத்திற்குப் பின் நடத்தப்படும் 8வது மக்கள்தொகை கணக்கெடுப்பு இது’ என கூறப்பட்டுள்ளது.

* சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி ஒன்றிய அரசு மவுனம் காங். குற்றச்சாட்டு

காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளதாவது:மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 16வது மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அறிவிப்பை ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதற்கு பணிந்துதான் பிரதமர் மோடி ,மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தார். ஆனால், நேற்று வெளியிட்ட அறிவிப்பில் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரியான கணக்கெடுப்பு பற்றி எந்த வித குறிப்பும் இல்லை. ஏற்கனவே பல விஷயங்களில் ஒன்றிய அரசு யூடர்ன் அடித்துள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பில் இருந்தும் அரசு பின்வாங்குவதை போல் தெரிகிறது. அல்லது, இதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படுமா? என தெரியவில்லை. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement