2024 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சுற்றுச்சூழல் விருதுகள் அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாகப் பணியாற்றி வரும் கல்வி நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான "சுற்றுச்சூழல் விருதுகள்" வழங்கி கௌரவிப்பதற்குத் தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளது.
விருதுகளின் விபரங்கள் மற்றும் தேர்வு செய்யப்படும் விருது பெறுபவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் விருதுகளுக்கான தொகை ஆகியவை கீழ்க்கண்டவாறு
விருதின் வகை மற்றும் விருதுகளின் பெயர்கள்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி
முதல் பரிசு ரூ.50,000, 2ம் பரிசு 30,000, 3ம் பரிசு 20,000
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுகள்
முதல் பரிசு ரூ.50,000, 2ம் பரிசு 30,000, 3ம் பரிசு 20,000
சுற்றுச்சூழல் மேலாண்மை விருதுகள்
முதல் பரிசு ரூ.50,000, 2ம் பரிசு 30,000, 3ம் பரிசு 20,000
சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கான விருது
முதல் பரிசு ரூ.50,000
விருதுகளின் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்கத் தகுதியுடைய நபர்கள் ஆகியவை பின்வருமாறு.
விருதுகளின் விவரம்
1)சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி
தகுதியுடைய நபர்கள்
சுற்றுசூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள் / கல்வியாளர்கள்/ தனிநபர்கள்
2)சுற்றுச்சூழல் பாதுகாப்பு
தகுதியுடைய நபர்கள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் தனி நபர்கள்
3) சுற்றுச்சூழல் மேலாண்மை
தகுதியுடைய நபர்கள்
சுற்றுச்சூழல் மேலாண்மையில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள்
4) சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கட்டுரை
தகுதியுடைய நபர்கள்
சுற்றுச்சூழலின் மேலாண்மைக்கு வித்திடும் ஆராய்ச்சியாளர்கள்/ ஆராய்ச்சி நிறுவனங்கள்.
வரிசை எண். 1 முதல் 3 வரையிலான விண்ணப்பதாரர்களுக்கான வழிகாட்டுதல்கள்
1) விண்ணப்பதாரர் தனிநபராக இருப்பின் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி பிரிவில் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
3) கடந்த 01.01.2024 முதல் 31.12.2024 வரையிலான காலத்தின் பணிகள் மட்டுமே விண்ணப்பத்தில் இடம்பெற வேண்டும்.
4) சுற்றுச்சூழல் மேலாண்மை (அ) சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவில் விண்ணப்பிக்கக்கூடிய தனிநபர்/நிறுவனம் அறிவிக்கையில் குறிப்பிட்ட கால கட்டத்தில் மேற்கொண்ட களப்பணி மற்றும் அதைச் சார்ந்த பிரசுரங்கள், பத்திரிக்கை குறிப்புகள், திட்ட அறிக்கைகள், அதனால் ஏற்பட்ட பயன்பாடு, பயனாளிகள்/ பங்கு பெற்றோர் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இடம்பெற வேண்டும்.
5) ஏதேனும் ஒரு பிரிவில் மட்டுமே தனிநபர் / நிறுவனம் விண்ணப்பிக்கலாம்.
6) மேற்கண்ட மூன்று பிரிவிற்கும் அப்பிரிவின் எதிரே குறிப்பிட்டுள்ள தகுதியுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்கள் /நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக் கட்டுரைக்கான விண்ணப்பதாரர்களுக்கான வழிகாட்டுதல்கள்
1) சிறந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஊக்குவிக்கும் வண்ணம் 2024ம் ஆண்டில் வெளியான, தனிநபர் அல்லது ஒன்றிற்கு மேற்பட்டோர் இணைந்த உருவாக்கிய சுற்றுச்சூழல் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரையாக இருக்க வேண்டும்.
2) ஆராய்ச்சிக் கட்டுரைகள் தமிழ் (அ ) ஆங்கிலத்தில் தரமான ஏடுகளில் பிரசுரிக்கப்பட்டவைகளாக இருக்க வேண்டும்.
3) ஆங்கில கட்டுரையானால் ஆராய்ச்சி கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு இணைக்கப்பட வேண்டும்.
4) இதற்கு ஆதாரமாக எந்த ஆராய்ச்சி/அறிவியல் ஏடுகளில் பிரசுரிக்கப்பட்டது என்ற விவரம் அளித்தல் வேண்டும்.
5) 2024ம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
6) ஆராய்ச்சி கட்டுரை பிரிவின்கீழ் சம்பந்தப்பட்ட தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டிருப்பின் (தமிழிலும் / ஆங்கிலத்திலும்), அந்த புத்தகம் முழுமையாக இணைத்தல் வேண்டும்.
7) ஆராய்ச்சி கட்டுரை மற்றும் புத்தகம் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் சேர்ந்து பிரசுரம் செய்தருந்தால், முதல் நபர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்.
விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் முறை
மேற்கண்ட விருதுகளுக்காக விண்ணப்பிக்கும் தனிநபர்கள் / நிறுவனங்கள். தமிழ்நாடு விருதுகள் (http://awards.tn.gov.in) இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட இணைவழி விண்ணப்பங்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். அஞ்சல், மின்னஞ்சல் அல்லது நேரிலோ பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
விருதுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்
விண்ணப்பதாரர்கள் http://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 25.10.2025 முதல் 14.11.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்விருதுகள் குறித்த மேலும் விபரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி
இயக்குநர்,
சுற்றச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை,
9வது தளம், எண். 327. மெட்ரோஸ், அண்ணா சாலை,
நந்தனம், சென்னை 600 035.
தொலைபேசி-044-24336421
மின்னஞ்சல் முகவரி - tndoe@nic.in
வலைத்தளம்: http://environment.tn.gov.in
இயக்குநர்
சுற்றுச்சூழல் மற்றும்
காலநிலை மாற்றத்துறை