ஹவுதிக்கள் பிடியில் 19 ஐநா ஊழியர்கள்
சனா: ஏமன் மீது இஸ்ரேல் கடந்த வாரம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹவுதிக்களின் பிரதமர் அல் ராஹாவி மற்றும் பல கேபினெட் அமைச்சர்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஏமனின் தலைநகரான சனாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உணவு, சுகாதாரம் மற்றும் குழந்தைகள் நிறுவனங்களின் அலுவலகங்களில் ஞாயிறன்று ஹவுதிகள் சோதனை நடத்தினர். சோதனையின்போது ஹவுதிக்கள் சுமார் 19 ஐநா ஊழியர்களை பிடித்து வைத்துள்ளனர் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement