தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

183 ரன்னில் சுருண்டது சவுராஷ்டிரா

கோவை: தமிழ்நாடு அணியுடனான ரஞ்சி காலிறுதியில், சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 183 ரன்னுக்கு சுருண்டது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற சவுராஷ்டிரா பேட் செய்தது. சாய் கிஷோர் - அஜித் ராம் கூட்டணியின் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய சவுராஷ்டிரா 77.1 ஓவரில் 183 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் ஹர்விக் தேசாய் 83 ரன் விளாசினார். பிரேரக் 35, வாசவதா 25, ஷெல்டன் 22 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
Advertisement

புஜாரா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். தமிழ்நாடு தரப்பில் சாய் கிஷோர் 5, அஜித் ராம் 3, சந்தீப் வாரியர் 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 23 ரன் எடுத்துள்ளது. இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

விதர்பா 261/3

நாக்பூரில் கர்நாடகா அணியுடன் நடக்கும் காலிறுதியில், விதர்பா அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 261 ரன் குவித்துள்ளது (86 ஓவர்). அதர்வா டெய்டே 109 ரன், யஷ் ரத்தோட் 93, துருப் ஷோரி 12 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கருண் நாயர் 30, கேப்டன் அக்‌ஷய் வாத்கர் 2 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

மும்பை 248/5

பரோடா அணிக்கு எதிராக பந்த்ரா குர்லா வளாக மைதானத்தில் நடக்கும் காலிறுதியில், மும்பை அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன் எடுத்துள்ளது. பிரித்வி ஷா 33, லால்வானி 19, சூர்யான்ஷ் 20 ரன் எடுத்தனர். முஷீர் கான் 128 ரன், ஹர்திக் தமோர் 30 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். பரோடா பந்துவீச்சில் பார்கவ் பட் 4, நினத் ரத்வா 1 விக்கெட் வீழ்த்தினர்.

ம.பி. 234/9

ஆந்திரா அணியுடன் இந்தூர் ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய ரஞ்சி காலிறுதியில், டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த மத்திய பிரதேசம் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 234 ரன் எடுத்துள்ளது (81 ஓவர்). யஷ் துபே 64, ஹிமான்ஷு 49, கார்த்திகேயா 29 ஹர்ஷ் 17 ரன் எடுத்தனர். சரன்ஷ் ஜெயின் 41, கெஜ்ரோலியா 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

Advertisement