திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழாவில் 200 கண்காணிப்பு கேமராக்களுடன் 1,683 போலீசார் பாதுகாப்பு: மாவட்ட எஸ்.பி தகவல்
Advertisement
கூட்டத்திற்குப் பிறகு மாவட்ட எஸ்.பி னிவாச பெருமாள் நிருபர்களிடம் கூறுகையில், பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து 1,683 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதே நேரத்தில் குற்ற சம்பவங்கள் தடுக்க 200 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, மலைக்கோயில் பேருந்து நிலையம், தற்காலிக பேருந்து நிலையங்களில் 20 பகுதிகளில் வாட்ச் டவர்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழ்நாடு, ஆந்திர பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 28ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு 360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.
Advertisement