தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உச்ச நீதிமன்ற கொலீஜியம் அதிரடி: 14 உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம்

டெல்லி: நாடு முழுவதும் பல்வேறு உயர் நீதிமன்றங்களைச் சேர்ந்த 14 நீதிபதிகளை ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் அதிரடியாக பரிந்துரை செய்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் இடமாற்றம் என்பது நிர்வாக ரீதியான வழக்கமான நடைமுறை என்றாலும், ஒரே நேரத்தில் 14 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது நீதித்துறையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக, உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூட்டம் கடந்த 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், சென்னை, ராஜஸ்தான், டெல்லி, அலகாபாத், குஜராத், கேரளா, கொல்கத்தா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் பாட்னா (பீகார்) உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களைச் சேர்ந்த 14 நீதிபதிகளை இடமாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த அதிரடி இடமாற்றப் பட்டியலில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜே. நிஷா பானு, கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோல் இதேபோல், நீதிபதி அதுல் தரன் (மத்தியப் பிரதேசம் - சட்டீஸ்கர்), நீதிபதி சஞ்சய் அகர்வால் (சட்டீஸ்கர் - அலகாபாத்), நீதிபதி தினேஷ் மேத்தா (ராஜஸ்தான் - டெல்லி), நீதிபதி சஞ்சய் குமார் சிங் (அலகாபாத் - பாட்னா), நீதிபதி டோனடி ரமேஷ் (அலகாபாத் - ஆந்திரா), நீதிபதி சுபேந்து சமந்தா (கொல்கத்தா - ஆந்திரா) உள்ளிட்ட 14 நீதிபதிகளின் இடமாற்றப் பரிந்துரைகள் அடங்கிய முழுமையான அறிக்கையை கொலீஜியம் வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையை ஒன்றிய அரசு ஏற்று ஒன்றிய சட்ட அமைச்சகத்தால் அரசாணை வெளியிடப்படும் பட்சத்தில் 14 உயர்நீதிமன்ற நீதிபதிகளும் மாறுதல் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement