பலாத்கார முயற்சியில் கொடூரம் 40 வயது பெண்ணை கொன்ற 14 வயது சிறுவன் கைது
ஹமிர்பூர்: இமாச்சலபிரதேசத்தில் 14 வயது சிறுவன் பலாத்காரம் செய்ய முயன்ற 40 வயது பெண் உயிரிழந்தார். இமாச்சலபிரதேச மாநிலம் ஹமிர்பூர் கிராமத்தில் கடந்த 3ம் தேதி 40 வயது பெண் ஒருவர் புல் வெட்டி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 9ம் வகுப்பு பயிலும் மாணவ அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக வயல்வௌிக்குள் இழுத்து சென்று, அங்கு அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான். அதை தடுக்க முயன்ற பெண்ணை அந்த சிறுவன் தடி மற்றும் அரிவாளால் கொடூரமாக தாக்கி உள்ளார். பின்னர் அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். அப்போது அந்த வழியே வந்த கிராம மக்கள், வயலில் ரத்த வௌ்ளத்தில் பெண் இருப்பதை கண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் பலியானார். இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்தனர். குற்றம் நடந்த இடத்தில் இருந்து உடைந்த பேனா, ஸ்கேல் துண்டுகள் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.