கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள்: EPFO புள்ளிவிவரத்தில் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக EPFO வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்காக முதலீடுகளை ஈர்த்து வருவதோடு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு வேலைவாய்ப்பு சதவீதம் உயர்ந்துள்ளதாக தற்போது இபிஎப்ஓ புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு கடந்த நான்கு வருடங்களில் மட்டும் ஒரு வருஷத்திற்கு சராசரியாக 12.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் சுமார் 10% தமிழ்நாட்டில் இருந்து வந்தது என அதன் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. மேலும் 4 வருடங்களில் மொத்தமாக 52 லட்சத்திற்கும் அதிகமானோர் EPFO-வில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.