தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

11ம் வகுப்பு பொதுத்தேர்வையும் கருத்துடன் எதிர்கொள்ள வேண்டும்

*மாணவ மாணவியருக்கு கலெக்டர் வேண்டுகோள்
Advertisement

நாகர்கோவில் : குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேற்று தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியை பார்வையிட்டு 11 மற்றும் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது 10, 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை 100 சதவீதமாக கொண்டு வரும் நோக்கில் அறிவுரைகள் வழங்கினார். அப்போது கலெக்டர் அழகுமீனா கூறியதாவது:

11ம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் 11ம் வகுப்பு தேர்வில் முழுமையாக தேர்ச்சி பெற்றால் தான் எந்த இடையூறுமின்றி 12ம் வகுப்பு பாடத்தினை முழு கவனத்துடன் படிக்க இயலும்.

எனவே 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விளையாட்டாய் 11ம் வகுப்பை எதிர்கொள்ளாமல், கருத்துடன் படித்து நல்ல தேர்ச்சியினை பெற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, மாணவர்கள் தாங்கள் விரும்புகிற உயர் கல்வியியை கல்லூரிகளில் பெற இயலும்.

கல்லூரிகளில் சேர்ந்து உயர்கல்வினை பெற வேண்டும் என்கிற உயரிய குறிக்கோளோடு, அதிக மதிப்பெண் பெறுவதை லட்சியமாகக் கொண்டு 12 ம் வகுப்பு மாணவர்கள் பாடங்களை படித்திடல் வேண்டும்.

கடந்த வருடத்தில் மாணவர்கள் ஒழுங்காக பள்ளிக்கு வராததினால் தான், தோல்வியை தழுவியுள்ளனர். எனவே அனைத்து மாணவர்களும் தவறாமல் ஒழுங்காக தினமும் பள்ளிக்கு வருகை புரிந்திடல் இன்றியமையாத ஒன்றாகும்.

தினமும் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை அன்றைய தினமே படித்திட்டால், தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்றுத் தரும். தற்போது அனைத்து அரசு பள்ளிகளிலும் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் சார்ந்த விழிப்புணர்வு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவர்களாகிய தாங்கள் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியரின் உதவியுடன் கிடைக்கப்பெறும் இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி, 12ம் வகுப்புக்கு பின் சேர வேண்டிய சிறந்த உயர் கல்வியினை திட்டமிட்டு, அதற்கான பயிற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபடுதல் வேண்டும்.

கடந்த வருடம் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியரின் வழிகாட்டுதலோடு கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த அரசு பள்ளி மாணவர்கள் சிலர், தேசிய அளவிலான முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இந்த கல்வி ஆண்டிலும், 12ம் வகுப்பு பயிலும் அதிகமான அரசு பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு, தேசிய முன்னணி கல்வி நிறுவனங்களில் பயிலும் வாய்ப்பை பெற வேண்டும். அதற்கான முயற்சிகளை தங்களது பள்ளி பாடங்களின் ஊடே தொடர்ந்திடல் வேண்டும்.

மாணவர்கள், தேர்ச்சி ஒன்றை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படாமல், அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கில், தேவையற்ற விளையாட்டுகளை புறந்தள்ளி, கடின உழைப்புடன், படித்தால் அதிக மதிப்பெண்களை பெற இயலும். அதன் விளைவாக சிறந்த கல்லூரிகளில் உயர் கல்வியை தொடரும் நிலையை அடைய முடியும்.

கல்லூரி படிப்பு என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மறக்க முடியாத ஒன்றாகும். எனவே அத்தகைய கல்லூரி படிப்புக்கு தயாராகும் விதத்தில் அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Advertisement

Related News