ஜம்மு-காஷ்மீரின் ராம்பனில் இன்று ஏற்பட்ட மேக வெடிப்பில் 11 பேர் உயிரிழப்பு : 5 பேர் மாயம்
ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் ராம்பனில் இன்று ஏற்பட்ட மேக வெடிப்பில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் மாயமாகியுள்ளனர். கடந்த சில நாட்களாக ஜம்மு-காஷ்மீர் முழுவதும் கனமழை பெய்து வருவதால் முக்கிய வழித்தடங்கள் சேதமடைந்துள்ளன. பூஞ்ச், கிஷ்த்வார், ஜம்மு, ரம்பன் மற்றும் உதம்பூர் ஆகிய இடங்களில் இன்றும் நாளையும் அதிக மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரம்பன் மாவட்டத்தின் ராஜ்கர் தாலுகாவில் ஏற்பட்ட மேக வெடிப்பில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர், மேலும் ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர். மீட்புக் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு விரைந்துள்ளதாகவும், காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரிவித்தனர்.
"இதுவரை மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் ஐந்து பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். திடீர் மேக வெடிப்பு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டு, அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.