தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எம்ஆர்சி.நகரில் உள்ள ஓட்டலில் காதல் திருமணம் செய்ய உதவிய நண்பர்களுக்கு ஓஜி கஞ்சா விருந்து: தொழிலதிபரான புதுமாப்பிள்ளை உட்பட 10 பேர் அதிரடி கைது

Advertisement

சென்னை: காதல் திருமணம் செய்ய உதவிய நண்பர்களுக்கு எம்ஆர்சி நகரில் உள்ள ஓட்டலில் மது மற்றும் ஓஜி கஞ்சா விருந்து வைத்த தொழிலதிபரான புதுமாப்பிள்ளை உட்பட 10 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கிராம் கஞ்சா, 48 கிராம் உயர்ரக ஓஜி கஞ்சா, 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பட்டினப்பாக்கம் காவல் எல்லையில் உள்ள எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கொளத்தூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்(27). இவர் இளம் பெண் ஒருவரை பல ஆண்டுகள் காதலித்து வந்துள்ளார். இவரது காதலுக்கு பெண் வீட்டார் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தோஷ் ஒரு கட்டத்தில் தனது நண்பர்கள் துணையுடன் கடந்த வாரம் இளம் பெண்ணை திருமணம் செய்தாக கூறப்படுகிறது.

பல ஆண்டுகள் காத்திருந்து காதல் திருமணம் செய்ததால் சந்தோஷ் திருமணத்திற்கு உதவிய நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று திருமண வரவேற்பு நடத்தினார். அந்த திருமண வரவேற்பு முடிந்த உடன் சந்தோஷ் தனது நண்பர்களுக்கு மட்டும் மதுபானங்கள் மற்றும் உயர் ரககத்தை கொண்ட ஓஜி கஞ்சா பார்ட்டி கொடுத்துள்ளார். மேலும் நண்பர்களுக்கு இளம் பெண்களும் சப்ளை செய்ததாக கூறப்படுகிறது. ஓஜி வகை கஞ்சா பார்ட்டியில் பயன்படுத்துவது குறித்து ஓட்டல் நிர்வாகத்திற்கு தெரியவந்தது. பொதுவாக ஓட்டல்களில் இரவு நேர பார்ட்டிகளில் தடை செய்யப்பட்ட ஓஜி கஞ்சா, மெத்தப்பெட்டமைன், கொக்கைன் உள்ளிட்ட உயர் ரக போதை பொருட்கள் பயன்படுத்த கூடாது என்று போதை பொருள் தடுப்பு பிரிவு கடுமையான உத்தரவு போட்டுள்ளது.

இதனால், அச்சமடைந்த ஓட்டல் நிர்வாகம் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த பார்ட்டில் ஓஜி வகை கஞ்சா பயன்படுத்துவது குறித்து ரகசியமாக பட்டினப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு சம்பந்தப்பட்ட எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் ஓட்டலில் இரவு விருந்து அளிக்கப்பட்ட அறையில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் காதல் திருமணம் செய்த சந்தோஷ் தனது நண்பர்களுக்கு கஞ்சா மற்றும் ஓஜி வகை கஞ்சா பார்ட்டியில் வழங்கியது உறுதியானது. உடனே பார்ட்டி கொடுத்த சந்தோஷை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது, தனது நண்பர்களுக்கு பெரிய அளவில் விருந்து வழங்க வேண்டும் என்ற நோக்கில் சினிமா துறையில் பணியாற்றும் தனது நண்பரான சூளை பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வர்(37) என்பவரிடம் கூறியுள்ளார்.

அதற்கு ஜெகதீஸ்வர் பார்ட்டிக்கு தேவையான போதை பொருள் சப்ளை நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அதன்படி பார்ட்டிக்கு தேவையான கஞ்சா மற்றும் ஓஜி வகை கஞ்சாவை ஜெகதீஸ்வரன் வாங்கி வந்து சந்தோஷிடம் கொடுத்துள்ளார். அதன்பிறகு தான் அனைத்து நண்பர்களுக்கும் போதை பொருள் பார்ட்டியில் வழங்கப்பட்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் அதிரடியாக காதல் திருமணம் செய்த கொளத்தூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபரான சந்தோஷ் மற்றும் கஞ்சா வாங்கி கொடுத்த சூளை பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வர் மற்றும் அவர்களின் நண்பர்களான அம்பத்தூர் பகுதியை சேர்ந்த தீபக்(27), புழல் சூரப்பட்டு பகுதியை சேர்ந்த ஆராதாத அக்ஷய்ராஜீ(21), திருவள்ளூரை சேர்ந்த ரோகித்(21), கிருஷ்ணபரிக்(20), மனிஷ்(22), சரத்குமார்(32), பூந்தமல்லியை சேர்ந்த மதன்குமார்(29), திருவள்ளூரை சேர்ந்த ஜிலான்(28), அம்பத்தூரை சேர்ந்த காமேஷ்(25), ஆகிய 10 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கிராம் கஞ்சா, 48 மில்லிகிராம் ஓஜி கஞ்சா மற்றும் 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Related News