தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வதனமே சந்திர பிம்பமே…

நன்றி குங்குமம் தோழி

பெண்கள் தங்கள் முகத்தை அழகாகவும், வசீகரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். அப்படி அழகாக வைத்துக் கொள்ள சில எளிய முறைகளை கையாண்டு

வந்தால் போதும் அழகாக மாறிவிடும்.

* உருளைக்கிழங்கு சாற்றுடன் சம அளவு தேன் கலந்து முகத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் சருமம் பளிச்சென்று மாறிவிடும்.

* நன்கு பழுத்த பப்பாளி பழத்தின் சாற்றை முகத்தில் தேய்த்தால், வடுக்கள் மாறி முகம் பொலிவு பெறும்.

* தயிரை முகத்தில் பூசி, ஊற வைத்து பின்பு முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.

* கசகசாவை ஊறவைத்து, அரைத்து முகத்தில் பூசி, பின்பு வெது வெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் முகச் சுருக்கங்கள் நீங்கி அழகாக இருக்கும்.

* பாலுடன் சில துளிகள் கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் ேசர்த்து முகத்தில் பூசி ஊறவைத்து, கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.

* வாழைப் பழத்தை கூழாக்கி, அதனுடன் தேனை கலந்து முகத்தில் பூசி, ஊறவைத்து கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.

* கடலை மாவுடன் சிறிதளவு எலுமிச்சை சாறை சேர்த்து கலந்து முகத்தில் பூசிஊற வைத்து, குளித்து வந்தால் முகம் நல்ல நிறத்துடன் அழகாக மாறும்.

* பாலுடன் எலுமிச்சை சாறை சேர்த்து அத்துடன் சிறிதளவு சர்க்கரையை கலந்து முகத்திற்கு பூசி, அரை மணி நேரம் ஊறவைத்து பின்பு முகத்தை வெந்நீரினால் கழுவினால் முகம் பளபளப்பாகும்.

* வெள்ளரிச் சாறை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் முகம் பளிச்சென்று பளபளக்கும்.

* தக்காளியை இரண்டாக நறுக்கி, முகத்தில் தேய்த்து, அரை மணி நேரம் ஊறவைத்து, பின்பு கழுவினால் முகம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் மாறும்.

* சருமம் வறண்டு இருந்தால் கற்றாழை ஜெல்லுடன் தேன் கலந்து முகத்தில் தடவலாம். இவ்வாறு செய்வதன் மூலம் முகம் பொலிவடையும்.

* மஞ்சளை பச்சைப் பாலில் கலந்து முகத்தில் தடவி வர, சில நாட்களில் முகம் பளபளக்கும்.

* இரண்டு தேக்கரண்டி அரிசி மாவுடன் மூன்று தேக்கரண்டி பால் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து, முகத்தில் தடவி, மெதுவாக மசாஜ் செய்யவும். 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், வெயிலினால் ஏற்பட்ட கருமை மறையும். இது போன்ற எளிய வழிமுறைகளை பின்பற்றி பளபளப்பான முகப்பொலிவுடன் வலம் வரலாம்.

அ.திவ்யா, காஞ்சிபுரம்.