தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறப்புக் குழந்தைகளின் சிறந்த அன்னை!

நன்றி குங்குமம் தோழி

Advertisement

தன்னம்பிக்கை நிறைந்தவர், சிறப்புப் பள்ளியின் பொறுப்பாசிரியர், மகளின் வாழ்க்கையே முக்கியம் என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்தான் ஆசியா பெனாசீர். ‘‘சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம். அங்குள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 வரை படிச்சேன். பிறகு இளங்கலையில் பி.ஏ. செயலர் படிப்பினை தேர்வு செய்து படித்தேன். 2ம் ஆண்டு முதல் பருவத் தேர்வு நெருங்கிய போது, வீட்டில் திருமணம் பேசி முடிச்சாங்க. வீட்டில் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை என்றாலும், இரண்டாம் ஆண்டிற்கான தேர்வினை எழுதிவிட்டு பாதியிலே டிஸ்கன்டின்யு செய்துவிட்டேன். திருமணத்திற்குப் பிறகு என்னால் என்னுடைய கல்லூரிப் படிப்பினை தொடர முடியவில்லை.

திருமணம், குடும்பம் என்று என் வாழ்க்கை நகர்ந்தது. 1999ம் ஆண்டு நான் கருத்தரித்து இருந்தேன். பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். குழந்தையின் தலை வெளியே வராத காரணத்தால் அறுவை சிகிச்சை மூலம் எனக்கு குழந்தை பிறந்தது. கழுத்தில் கொடி சுற்றி இருந்ததால் என் மகள் பிறக்கும் போது நீல நிறத்தில் இருந்தாள். பிறந்த போது அவள் அழவே இல்லை. இரண்டு நாட்கள் இன்குபேட்டரில் வைத்திருந்தார்கள். மூன்றாம் நாள்தான் என்னிடம் கொடுத்தார்கள். பிறந்த மூன்றே நாளான சிசு என்பதால், என் மகளின் ேதாற்றத்தில் எந்த வித்தியாசமும் எனக்குத் தெரியவில்லை. சாதாரண குழந்தைப் போல்தான் இருந்தாள்.

குழந்தைக்கு ஆறு மாத காலம் இருக்கும் போது வலிப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றோம். ஒருநாள் அங்கே சிகிச்சை அளித்த பிறகு மதுரையில் உள்ள நரம்பியலர் நிபுணரிடம் காண்பிக்க சொன்னார்கள். அங்கே சென்று பரிசோதித்த டாக்டர், அவள் கருவாக வயிற்றில் இருக்கும் போது, தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்ததால் நடப்பது, பேசுவதில் தாமதம் ஏற்படலாம் என்று கூறினார். என் குழந்தைக்கு ஏன் இந்த நிலை என்று நான் மனமுடைந்து போனேன். அருகில் இருந்த பெண் மருத்துவர் ஒருவர் ஆதரவு சொல்லி என்னைத் தேற்றி, வலிப்பு வராமல் இருக்க மாத்திரைகள் தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்று கூறினார். மாத்திரைகளை தொடர்ந்து கொடுத்த போதும் ஒருநாள் அவளுக்கு மீண்டும் வலிப்பு ஏற்பட்டது. மீண்டும் மருத்துவரிடம் அழைத்து சென்றேன். அப்போது தான் எங்களுக்கு தெரிய வந்தது அவள் சிறப்புக் குழந்தை என்று.

அவளின் வளர்ச்சியில் எல்லாவற்றிலும் தாமதம் ஏற்படும் என்று மருத்துவர் கூறினார். அதனால் பேச்சு, பிசியோதெரபி என அவளுக்கான அனைத்துப் பயிற்சிகளும் கொடுத்தால்தான் மற்ற

குழந்தைப் போல் செயல்படுவாள் என்று அறிவுரைக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து பயிற்சிகள் வழங்க ஆரம்பித்தோம். 9 மாதத்தில் நடக்கவும், 54-வது மாதத்தில் பேசவும் தொடங்கினாள். ஆனால், அவளால் நாம் சொல்வதை புரிந்துகொள்ள முடியவில்லை.

அதில் சிரமமாக இருப்பதை கண்டறிந்தோம். மறுபடியும் பரிசோதித்த போது அறிவு சார் குறைபாட்டினை கண்டறிந்தோம். மருத்துவர்கள் அவளின் வேலையை அவளாக செய்து கொள்ளவும் பயிற்சி அளிக்க வேண்டும் என்றனர். முக்கியமாக கழிவறை, பல் துலக்குதல், ஆடை அணிவித்தல், தலை சீவுதல், சாப்பிடுதல் என அனைத்தும் கற்றுக் கொடுத்தோம். மேலும், மற்ற வேலைகளை அவள் ஒருவரின் கண்காணிப்பில் செய்ய முடியும் என்பதால் அதற்கான பயிற்சியும் அளித்தோம். இதன் மூலம் அவர்களால் மற்றவர்களைப் போல் சமுதாயத்துடன் இணைந்து வாழ முடியும் என உத்தரவாதம் கொடுத்தார்.

இதற்கிடையில் எனக்கும் என் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மகளுக்கான மருத்துவ செலவுகள் அதிகம் என்பதால், எல்லாவற்றுக்கும் அவரையே எதிர்பார்க்க முடியாது என்று யோசித்தேன். ஏன் சிறியதாக ஒரு தொழிலை செய்யக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. அதற்கு என் வாழ்க்கைத் தரத்தை நானே மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன் முதல் கட்டமாக தையல் பயிற்சியை மேற்கொண்டேன்.

பை, உள்பாவாடை தைத்து கொடுக்க ஆரம்பித்தேன். ஆனால், அதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. என்னுடைய இளங்கலையை முடித்தால் ஏதாவது வேலை கிடைக்கும் என்று நினைத்து, கல்லூரியை நாடினேன். அங்கிருந்தவர்கள் ‘அதிக ஆண்டுகள் இடைவெளி ஆகிவிட்டது. அதனால் மீண்டும் கல்லூரியில் இணைத்துக் கொள்வது கடினம். நீங்கள் வேறு ஏதாவது முயற்சி செய்யுங்கள்’ என்று கூறினார்கள்.

2005-ம் ஆண்டு ஒரு சிறப்புப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. முதல் நாள் வேலைக்குத் தயாரான போது, எப்படி குழந்தைகளுக்கு சொல்லித் தரப்போகிறோம். படித்தது அனைத்தும் மறந்தது போல இருந்தது. அதைவிட வீட்டுக்குள்ளேயே அடைந்திருந்ததால், மற்றவர்களுடன் பேசுவது, பழகுவது என அனைத்தும் தடைபட்டிருந்தது. பெற்றோர், சகோதரர் என்னை உற்சாகப் படுத்தி, சுயமாக வாழ எனக்கு ஒரு வேலை தேவை என்று புரிய வைத்தனர்.

ஆனாலும், எனக்குள் பயம், பதற்றம், கூச்சம் இருந்தது. இன்று வரை வீட்டில் பெற்றோர்கள் எப்படி உற்சாகப்படுத்தினார்களோ, அதே அளவில் பள்ளியின் நிறுவனர் வெங்கடரமணன், அவரது துணைவியார் தனலெட்சுமி இருவரும் எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறார்கள்’’ என்றவர், தொலைதூரக் கல்வி மூலம் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பினை முடித்தது மட்டுமில்லாமல் சிறப்புக் குழந்தைகளுக்கான பட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.

‘‘தற்பொழுது சிறப்புப் பள்ளியில் பொறுப்பாசிரியராக பணியாற்றி வருகிறேன். எனது திருமண வாழ்க்கை 2008ல் முற்றிலும் முடிந்துவிட்டது. அதன் பிறகு ஆறு ஆண்டுகளில் என் தந்தையும், இரண்டு வருடம் கழித்து என் தாயையும் இழந்தேன். என் மகள் மட்டுமே என்னுடைய உறவு என்றானது. அவளும் வளர்ந்துவிட்டதால், தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள் எல்லோரும் அவளுக்குத் திருமணம் செய்து வைக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள்.

அதுவே எனக்கு பெரிய மன உளைச்சலினை ஏற்படுத்தியது. மனநல ஆலோசகரிடம் ஆலோசனை கேட்ட போது அவர், ‘தனி ஒருத்தியாக சிறப்புக் குழந்தையை வளர்க்கும் போது நீங்க இது போன்ற பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் மகளின் நிலையை நீங்கள் அறிவீர்கள். அவளுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டும் என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்றார். அதன் பிறகுதான் எனக்குள் தெளிவு ஏற்பட்டது.

அவளை நான் தனக்கான வேலையினை செய்துகொள்ள மட்டுமில்லாமல், தனியாக வாழவும் பழக்க ஆரம்பித்தேன். வீட்டு வேலைகளான துணி துவைப்பது, துணிகளை பீரோவில் அடுக்கி வைப்பது, காய்கறி நறுக்குவது, பள்ளியில் அவளின் ஆசிரியர்களுக்கு உதவி செய்வது, அங்கு பயிலும் மற்ற குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவது, வருகை பதிவேடுகளை அந்தந்த வகுப்பிற்கு எடுத்துச் செல்வது, சுற்றறிக்கையில் ஆசிரியர்களிடம் கையெழுத்து வாங்குவது, வகுப்பறைகளை சுத்தம் செய்வது என அனைத்து வேலைகளையும் செய்வாள்’’ என்றவர், சிறப்புக் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து விவரித்தார்.

‘‘மாணவர்களின் வயதிற்கும், புரியும் திறனுக்கும் ஏற்றார் போல் பயிற்சிகள் வழங்குவோம். சிறப்புக் கல்வி, பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, பேச்சுப் பயிற்சி, யோகா, விளையாட்டு, நடத்தை சீரமைப்பு போன்ற பயிற்சியினை நிபுணர்கள் கொண்டு வழங்கி வருகிறோம். இவர்களுக்கு கண்டிப்பாக ஏதாவது ஒரு தொழிற்பயிற்சி அவசியம். அவர்களின் வயது மற்றும் திறனுக்கு ஏற்ப தையல், சோப் ஆயில், பினாயில், சாம்பிராணி போன்றவற்றை தயாரிப்பதற்கான தொழிற் பயிற்சியும் வழங்கி வருகிறோம். இதனால் அவர்களின் மனநிலையில் நல்ல மாற்றத்தினை பார்க்க முடியும்.

பெற்றோர் தங்களின் குழந்தைகளை தேர்வு செய்வதில்லை. கருவிலேயே அவர்கள் சாதாரண குழந்தையா அல்லது சிறப்புக் குழந்தையா என்று நிர்ணயிக்கப்படுகிறது. எந்தக் குழந்தையாக இருந்தாலும், அவர்களை நல்ல மனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒருமுறைக்கு பலமுறை கற்றுத்தர வேண்டும். நாம் முதலில் செய்து காட்டி அதை போல் செய்ய வைக்க வேண்டும்.

அவர்களை எவ்வாறு பயிற்றுவிப்பது என்று அறிந்து பயிற்சி கொடுக்க வேண்டும். ‘அம்மா குளிக்கப் போறேன், சாமி கும்பிட போறேன், சாப்பிட போறேன், வாங்கிக் கொண்டு வந்த காய்கறிகளை ஃபிரிட்ஜில் அடுக்கி வைக்கப் போறேன்’ என்று நாம் அன்றாடம் செய்யும் பணிகளை, நமது குழந்தையிடம் சொல்லிக் கொண்டே செய்தால் அவர்களும் விரைவில் புரிந்துகொள்வார்கள்.

வீட்டில் உள்ள மற்ற குழந்தைகளுக்கும் அவர்கள் பற்றி சொல்ல வேண்டும். அப்போதுதான் அவர்களும் அந்தக் குழந்தைகளை சிறப்பாக பார்த்துக் கொள்வார்கள். துரித உணவுகள் மற்றும் மைதா உணவினை தவிர்ப்பது நல்லது. ஒரே உணவாக கொடுக்காமல். எல்லாவற்றையும் ஆரம்பத்திலேயே சாப்பிடப் பழக வேண்டும். அனைத்து வகை ஆடைகளையும் போட பழக வேண்டும்’’ என்றவருக்கு ‘சிறந்த அன்னையர்’ என்ற விருது கிடைத்துள்ளது.

தொகுப்பு: பொ.ஜெயச்சந்திரன்

 

Advertisement

Related News