தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இந்திய செவிலியருக்கு ஏமனில் தூக்கு!

நன்றி குங்குமம் தோழி 

ஏமன் நாட்டில் கடந்த 2017ல் நடந்த ஒரு கொலை தொடர்பான வழக்கில் கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஏமன் நாட்டின் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. ஏமன் தலைநகரான சனாவில் உள்ள மத்திய சிறையில் நிமிஷா அடைக்கப்பட்டுள்ளார்.நிமிஷா பிரியாவை மீட்பதற்கு ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்‌ஷன் கவுன்சில்’ என்ற குழுவும், நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரியும் பல்வேறு முயற்சிகளை எடுத்துவந்தனர். தாயார் பிரேமா குமாரி, இதற்காக இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று ஏமன் நாட்டிற்கு சென்றார்.

ஏமன் நாட்டில் ஷரியத் சட்டம் நடைமுறையில் இருப்பதால், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினருக்கு ‘ப்ளட் மணி (Blood Money)’ எனும் இழப்பீட்டுத் தொகையைக் கொடுத்து மன்னிப்பு பெறுவதன் மூலம் மட்டுமே நிமிஷாவை மரண தண்டனையில் இருந்து மீட்க முடியும் என்கிற நிலை உள்ளது. அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வந்த நிலையில், நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்ற, ஹூதி பிரிவைச் சேர்ந்த ஏமன் நாட்டு அதிபர் மெஹ்தி அல் மஷாத் கடந்த ஜனவரியில் ஒப்புதல் அளித்தார்.

ஏமனில் நிமிஷாவுக்கு என்ன நடந்தது..?

கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா. ஏமன் நாட்டின் தலைநகர் சனாவிற்கு கடந்த 2014ல் பணிக்காகச் சென்றுள்ளார். சிறிது காலம் அங்குள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிய நிலையில், 2015ல் மருத்துவமனை ஒன்றை ஏமனில் நிறுவத் திட்டமிட்டுள்ளார் நிமிஷா. ஏமன் நாட்டின் சட்டதிட்டங்களின்படி அந்நாட்டு பிரஜையின் உதவியுடன் மட்டுமே தொழிலை அங்கு நிறுவ முடியும். அதன் அடிப்படையில் தலால் அப்துல் மஹதி என்ற நபரை தனது பங்குதாரராக சேர்த்துக்கொண்ட நிமிஷா பிரியா, மருத்துவமனையை ஏமனில் தொடங்கினார்.

மருத்துவமனை தொடங்கிய சிறிது காலத்திலேயே ஏமனில் உள்நாட்டுப் போர் மூண்ட நிலையில், நிமிஷாவின் கணவர் மற்றும் அவரின் மகள் இருவரும் இந்தியா திரும்பியுள்ளனர். தனது பங்குகளின் பெரும் பகுதியை கைவிட முடியாத நிலையில், நிமிஷா ஏமனிலேயே தங்கிவிட்டதாகத் தெரிகிறது. இக்கட்டான ஒரு சூழலில் நிமிஷா இருந்த நிலையில், நிமிஷாவின் பங்குதாரரான தலால் அப்துல் மஹதி நிமிஷாவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும், தன்னைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதாகவும் நிமிஷா தரப்பில் சொல்லப்படுகிறது.

மேலும், மஹதியிடம் சிக்கியிருந்த தனது ஆவணங்கள், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை மீட்க நினைத்த நிமிஷா, கெடாமைன் (Ketamine) என்கிற மயக்க மருந்தை மஹதிக்கு கொடுத்துள்ளார். மருந்தின் அளவு கூடியதில் மஹதி இறந்து இருக்கிறார். 2017ம் ஆண்டில் நடந்த இந்த சம்பவத்தில், ஏமனைச் சேர்ந்த ஹனான் என்பவரின் உதவியுடன், இறந்த மஹதியின் உடலை நிமிஷா, வாட்டர் டேங்க் ஒன்றில் போட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

மஹதியின் உடலைக் கண்டுபிடித்த அந்நாட்டுக் காவல்துறை, நிமிஷாவைக் கைது செய்தது. நிமிஷா குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு உள்ளூர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. நிமிஷாவின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவரை மீட்க குடும்பத்தினர் தீவிர முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டனர்.

ஏமன் வழக்கப்படி நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபர், இறந்த நபரின் குடும்பத்தைச் சந்தித்து மன்னிப்புக் கோரியோ அல்லது அவர்கள் கேட்கும் Blood money தொகையினை வழங்கியோ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மனதை மாற்றலாம். ஒருவேளை அவர்கள் மன்னித்தால் தண்டனை நிறைவேற்றப்பட மாட்டாது என்பதே நடைமுறை.நிமிஷாவின் தாயார் உள்பட குடும்பத்தினர் கடந்த ஜனவரியில், மஹதி குடும்பத்தினரை ஏமனில் சென்று சந்தித்து மன்னிப்புக் கோரியுள்ளனர். அவர்களுக்கு வழங்குவதற்காக, இந்திய மதிப்பில் சுமார் 35 லட்சம் ரூபாய் பணத்தையும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இருப்பினும் நிமிஷாவை மீட்கும் முயற்சிகளில் எந்தப் பலனும் கிடைக்காத நிலையில், அவரது மரண தண்டனை ஜூலை 16ல் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நிமிஷாவின் வழக்கு உள்பட அவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள பகுதி வரை அனைத்துமே தலைநகர் சனாவில் உள்ளது.

ஏமனில் உள்நாட்டுப் போர் நடக்கும் சூழலில், தலைநகர் சனாவை, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களை இந்தியா அங்கீகரிக்காத நிலையில், ஏமன் உள்ளிட்ட நகரங்களை சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசு ஆண்டு வருகிறது. டெல்லியில் இருக்கும் தூதரகம், சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஏமன் அரசினுடையது என்பதால், இந்தியா தனது குடிமகளை விடுவிக்க ஹவுதி கிளர்ச்சியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதில் சிக்கல் தொடர்கிறது.

Blood Money என்பது?

ஒருவர் மற்றொருவரைத் தவறாக அல்லது திட்டமிட்டு கொன்றுவிட்டால், அந்த கொலைக்குத் தண்டனையாக அல்லது நஷ்ட ஈடாக கொல்லப்பட்ட நபரின் குடும்பத்துக்கு வழங்கப்படும் பணமே Blood Money. இது குற்றவாளி மீது விதிக்கப்படும் மரண தண்டனையை தவிர்க்க உதவும். ஆனால், இறந்தவர் குடும்பத்தின் சம்மதம் அவசியம். உயிரிழந்தவரின் குடும்பம், குற்றவாளிக்குத் தண்டனை வேண்டுமா அல்லது மன்னித்து தங்களுக்கு நஷ்டஈடு வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். பாதிக்கப்பட்ட குடும்பம் Blood Money-ஐ ஏற்க விரும்பினால், ஒரு நியமிக்கப்பட்ட தொகை அல்லது அவர்களால் தீர்மானிக்கப்படும் உயர்ந்த தொகையினைக் கேட்கலாம். இது நாடு, சட்டம், சம்பவம், மரணத்தின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், ஏமன், ஈரான் நாடுகளில் Blood Money சட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்த நாடுகள் எல்லாம் ஷரியா சட்டத்தின் அடிப்படையில் செயல்படுகின்ற நாடுகள். ஷரியா சட்டப்படி, கொல்லப்பட்ட நபரின் குடும்பத்தினர், குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை அல்லது மன்னிப்பு, இவை இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். மன்னிப்பு அளிப்பது, இஸ்லாமிய மதத்தில் ஒரு உயரிய செயலாக கருதப்படுகிறது.சில நாடுகளில் அரசே தொகையை நிர்ணயிக்கும். சில நாடுகளில் இறந்தவர் குடும்பம் பெரிய தொகையைக் கோருவார்கள். இரு தரப்புகளும் ஒப்புக்கொள்ளும் விவகாரமாக இது பார்க்கப்படுகிறது. நர்ஸ் நிமிஷா பிரியா வழக்கில் இதுவொரு மனிதாபிமானத்தின் வெளிப்பாடாய் பார்க்கப்படுகிறது.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

 

Related News