தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சாஃப்ட்வேர் டூ தொழில்முனைவோர்!

நன்றி குங்குமம் தோழி

திருமண நிகழ்வு, நிச்சயதார்த்தம், அலுவலக பார்ட்டி, வெற்றி விழாக்கள், கார்ப்பரேட் விழாக்கள் என அனைத்து விழாக்களிலும் கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கமாகி விட்டது. இதற்காக வழக்கமாக தயாரிக்கப்படும் கேக்குகளை விட வித்தியாசமாகவும் அதேசமயம் ஆரோக்கியம் நிறைந்த பொருட்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களுக்காகவே சுவையான கேக்குகள் செய்வதோடு மட்டுமல்லாமல் அதில் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தந்து வருகிறார் சாய் நிருபா. இவர் சென்னை தி.நகரில் வீட் பேக் என்ற பெயரில் கேக், குக்கீஸ், பிரெட் போன்ற பேக்கரி உணவுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

சாஃப்ட்வேர் டூ பேக்கரி...

எம்.பி.ஏ முடித்து விட்டு சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிந்து வந்தேன். திருமணம், குழந்தை பிறந்தவுடன் என்னால் வேலைக்குப் போக முடியவில்லை. என் மகனைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் வேலையை ராஜினாமா செய்தேன். இன்றை ஃபாஸ்ட் ஃபுட் காலக்கட்டத்தில் எல்லோரும் தங்களின் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.

நானும் அப்படித்தான் யோசித்தேன். அதனால் சின்ன வயதில் இருந்தே மைதா, வெள்ளை சர்க்கரையை அவனுக்கு கொடுப்பதை தவிர்த்தேன். அதற்கு மாற்றாக கோதுமை, வெல்லம், நாட்டுச் சர்க்கரையை கொடுத்து பழக்கினேன். மேலும் அவனுக்கான ஸ்நாக்ஸ் வகையினை அதாவது, கேக் மற்றும் பேக்கரி உணவுகளை நான் வீட்டிலேயே தயாரிக்க துவங்கினேன். அதை என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் கொடுத்தேன். அதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே இதனை சிறிய அளவில் பிசினஸாக மாற்றி அமைத்தேன். இப்போது எங்களின் பேக்கரி இரண்டு கிளைகளாக செயல்பட்டு வருகிறது.

தயாரிப்புகளின் சிறப்பம்சம்...

கோவேச்சர் எனப்படும் ப்யூர் சாக்லேட்களை மட்டுமே பயன்படுத்தி செய்கிறோம். அதே போல வெண்ணெய் மற்றும் வெல்லம் சேர்த்த பட்டர் கிரீம்களை பயன்படுத்துகிறோம். எந்தவிதமான செயற்கை கலர்களையும் உபயோகிப்பதில்லை. மைதாவிற்கு பதில் கோதுமை, கேழ்வரகு, சோளம், கம்பு, சிவப்பு சோளம் போன்ற மில்லட் வகை மாவுகளை பயன்படுத்தி கேக் மற்றும் குக்கீஸ் வகைகளை தயாரித்து அளிக்கிறோம். முளைகட்டிய தானியங்களை பவுடராக்கி அதனைக் கொண்டு ப்ரௌனி, குக்கீஸ் வகைகளை தயாரித்து தருகிறோம். பர்த்டே கேக்குகள் மட்டும் 15 வகை எங்களிடம் உள்ளது. இதுவரை 50,000த்துக்கும் மேற்பட்ட கேக்குகளை தயாரித்திருக்கிறோம். எங்களிடம் க்ளுட்டன் ப்ரீ கேக்குகளும் கிடைக்கும்.

எதற்கு வரவேற்பு அதிகமாக உள்ளது...

ராகி ப்ரௌனிக்கு மக்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள். எங்களது சிக்னேச்சர் பெல்ஜியம் சாக்லேட் கொண்டு தயாரிக்கப்படும் கேக்குகள், இதனை தவிர முளைகட்டிய தானிய பவுடர்கள் கேக்குகளுக்கான வரவேற்பு அதிகமாக உள்ளது. முழு கோதுமை பிரெட் மற்றும் மில்லட் குக்கீஸ் மற்றும் குழந்தைகள் விரும்பும் கப் கேக்குகள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். கொரோனாவிற்குப் பிறகு எல்லோரும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த துவங்கிவிட்டார்கள். அதனால் இன்றைய மார்க்கெட்டில் ஆரோக்கியமான சுவைமிக்க பொருட்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

கேக்குகளை நேரடியாகவோ அல்லது ஆன்லைன் முறையிலும் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். அதனை நாங்க டெலிவரியும் செய்கிறோம். சென்னை மட்டுமில்லாமல், கர்நாடகா மற்றும் தமிழகம் முழுதும் அனுப்புகிறோம். வெளியூர்களுக்கு கேக்குகளை அனுப்ப முடியாது என்பதால், பீநட் பட்டர் மற்றும் குக்கீஸ்களை மட்டுமே டெலிவரி செய்கிறோம். ஃப்ரெஷ்

கிரீம் வகை கேக்குகள் சென்னைக்கு மட்டும்தான் டெலிவரி.

பெண்களுக்கு முக்கியத்துவம்...

நான் தொழில் துவங்கிய போது எங்க வீட்டில் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தாங்க. அவர்களால்தான் என்னால் வெற்றிகரமாக பிசினஸை செயல்படுத்த முடிகிறது. அதன் அடையாளமாக கடந்த ஆண்டு சிறந்த பெண் தொழில்முனைவோர் விருதும் கிடைத்தது. இந்த வெற்றிகளை என்னை போல் தொழில் துவங்க ஆர்வமாக உள்ள மற்ற பெண்களும் பெறவேண்டும் என்று நினைத்தேன். என் இரு கடைகளின் நிர்வாகம், தயாரிப்பு, விற்பனை என அனைத்திற்குள் பெண்களை நியமித்திருக்கிறேன்.

என்னிடம் ஏழு பெண்கள் வேலைப் பார்க்கிறார்கள். மேலும் கிளைகள் மற்றும் பிரான்சைசி தரும் எண்ணம் இருப்பதால், அதன் மூலம் மேலும் பெண்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தர திட்டமிட்டிருக்கிறேன். மேலும் என் பேக்கரியில் வேலை பார்க்கும் அனைத்து பெண்களுக்கும் பேக்கிங் குறித்து முறையான பயிற்சி அளித்து அதன் பிறகுதான் அவர்களை வேலையில் நியமிக்கிறேன்.

எதிர்கால திட்டம்...

தற்போது இரண்டு கிளைகள் செயல்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் கிளைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும். பெண்களுக்கு பேக்கரி குறித்து முறையான பயிற்சி அளித்து அவர்களை தொழில் முனைவோராக மாற்றும் எண்ணங்களும் இருக்கிறது. தயாரிப்புகளில் புதிய நவீன யுக்திகளை புகுத்தி நிறைய வெரைட்டி கேக்குகளை தரவேண்டும். வீகன், சுகர் ப்ரீ கேக்குகள் மற்றும் பாரம்பரிய அரிசிகளில் பேக்கரி பொருட்களை அறிமுகம் செய்யும் திட்டம் உள்ளது. பேக்கரிக்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தும் திட்டம் இருக்கிறது. இதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். கண்டிப்பாக ஒவ்வொன்றையும் சக்சஸாக முடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் சாய் நிருபா.

தொகுப்பு: தனுஜா