சிங்கப்பூர், இலங்கைக்கு ஏற்றுமதியாகும் தமிழக பட்டு வேஷ்டி சேலைகள்..!!
நன்றி குங்குமம் தோழி
தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, கரூர், திருப்பூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் விசைத்தறி கூடங்கள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான விசைத்தறி கூடங்களில் லட்சக்கணக்கான விசைத்தறிகள் இயங்குகிறது. நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி அளவுக்கு ஜவுளி உற்பத்திகள் நடக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் தமிழகம் உள்பட வட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சேலம், நாமக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், விருதுநகர், மதுரை, திருநெல்வேலி உள்பட பல இடங்களில் கைத்தறியில் பட்டு வேஷ்டி, துண்டு, சர்ட் பிட், ஜமாக்களம், காட்டன் சேலை, பட்டுசேலை, காட்டன் வேஷ்டி, துண்டு, டவல், பெட்ஷீட் உள்பட பல்வேறு ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பட்டுவேஷ்டி, சேலைகள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், சிங்கப்பூர், அமெரிக்கா, இலங்கை, மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டுவேஷ்டி, சேலைகளுக்கு தேவையான பட்டுநூல் சீனாவில் இருந்து அதிகளவில் வருகிறது. கடந்த சில மாதமாக அங்கிருந்து வரவேண்டிய பட்டுநூலின் வரத்து சரிந்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக கர்நாடகாவில் தான் பட்டுநூல் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகம், ஆந்திராவில் 25 சதவீதம் அளவில் பட்டுநூல் உற்பத்தி செய்யப்படுகிறது. பட்டுநூல் உற்பத்தி ெபாருத்தமட்டில் கர்நாடகாவில் உற்பத்தியாகும் நூல் தரமாக இருக்கும். அதனால் பெரும்பாலான பட்டுவேஷ்டி, சேலை உற்பத்தியாளர்கள் கர்நாடகா பட்டுநூலையே விரும்புகின்றனர்.
தற்போது கர்நாடகா, தமிழகம், ஆந்திராவில் பட்டுக்கூடு உற்பத்திக்கு சாதகமான சூழ்நிலை நிலவவுதால் பட்டுக்கூடுகளின் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த நான்கு மாதத்திற்கு மேலாக தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் வழக்கமாக செய்யப்படும் உற்பத்தியில் இருந்து 50 சதவீதம் கூடியிருக்கிறது. அதனால் பட்டுசேலை, பட்டுவேஷ்டி உள்பட பல ஜவுளிகளுக்கு பட்டுநூலின் வரத்து அதிகரித்துள்ளது. சேலம் அம்மாப்பேட்டை, வலசையூர், பொன்னம்மாப்பேட்டை, சித்தேஸ்வரா, மல்லூர், ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர் உள்பட பல பகுதிகளில் பட்டு வேஷ்டி, துண்டு, அங்கவஸ்திரம் உள்ளிட்டவைகளின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. அதேபோல் பட்டுசேலைகளின் உற்பத்தியும் கூடியுள்ளது.
பட்டுவேஷ்டி, சேலைகள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், சிங்கப்பூர், அமெரிக்கா, இலங்கை, மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டுவேஷ்டி, சேலைகளுக்கு தேவையான பட்டுநூல் சீனாவில் இருந்து அதிகளவில் வருகிறது. கடந்த சில மாதமாக அங்கிருந்து வரவேண்டிய பட்டுநூலின் வரத்து சரிந்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக கர்நாடகாவில் தான் பட்டுநூல் உற்பத்தி செய்யப்படுகிறது.