தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

Simple சிகிச்சைகள்... Profit அதிகம்!

Advertisement

நன்றி குங்குமம் தோழி

பெண்களுக்கு பொதுவாகவே அழகாகவும் அதே சமயம் இளமையாகவும் காட்சியளிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அதற்காக அவர்கள் ெசய்யும் ெசலவுக்கு அளவே இல்லை. டோனர், ஃபவுண்டேஷன், காம்பாக்ட் பவுடர், லிப்ஸ்டிக் என்று அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். இன்று அழகுக் கலையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அழகுக்கலையின் அடுத்த பரிணாமம்தான் ஏஸ்தெடிக். அதில் எல்லோரும் விரும்புவது, செய்துகொள்வது PMU என்று சொல்லப்படும் Permanent Makeup. இதற்கென தனிப்பட்ட பயிற்சிகளை அளித்து வருகிறார் சென்னையை சேர்ந்த ‘எலைட் எஸ்.ஆர்.எம். ஏஸ்தெடிக்’ பயிற்சி மையத்தின் நிறுவனர் கன்னியம்மாள் வெங்கடேசன். இவர் தன் பயிற்சி மையத்தில் அழகுக் கலை நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு என தனிப்பட்ட அழகியல் பயிற்சியினை அளித்து வருகிறார்.

‘‘நர்சிங் துறையில் டிப்ளமோ முடித்துவிட்டு நான் என் கேரியரை மருத்துவ துறையில் செவிலியராக ஆரம்பித்தேன். அதில் எனக்கு பல ஆண்டுகள் அனுபவங்கள் இருந்தாலும் அழகுக் கலையின் மேல் ஆர்வம் இருந்தது. அதனால் அழகுக்கலை பயின்றேன். மருத்துவ பணியில் காஸ்மெட்டாலஜி துறையிலும் நான் பயணிக்க நேர்ந்தது. பிரஸ்ட் என்லார்ஜ்மென்ட், லைப்போசக்ஷன் என காஸ்மெட்டாலஜி சார்ந்த சிகிச்சை முறைகளை டாக்டருடன் இணைந்து செயல்பட்டேன். அப்போதுதான் அழகியல் பற்றி தெரிய வந்தது.

நான் ஏற்கனவே அழகுக் கலை பயின்று இருந்ததால், அழகியல் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட்டில் டிரைக்காலஜி மற்றும் காஸ்மெட்டாலஜியில் ஃபெல்லோஷிப் பயிற்சியினை மேற்கொண்டேன். மேலும் பெர்மனென்ட் மேக்கப் குறித்தும் கற்றுக் கொண்டேன். நான் கற்றுக் கொண்டதை மற்றவர்களுக்கும் தரமான முறையில் சொல்லித்தர விரும்பினேன். ‘எலைட் எஸ்.ஆர்.எம் அழகியல் பயிற்சி மையத்தினை’ துவங்கினேன்’’ என்றவர் தன் பயிற்சி மையத்தில் அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து விவரித்தார்.

‘‘அழகியல் பயிற்சியினை மெடிக்கல், பாராமெடிக்கல் மற்றும் non மெடிக்கல் என மூன்று பிரிவுகளாக பிரித்து பயிற்சி அளிக்கிறோம். மெடிக்கல் பிரிவில் எம்.பி.பி.எஸ், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, எம்.டி.எஸ் மருத்துவர்கள் மட்டும்தான் பயிற்சி பெற முடியும். இதில் ஏஸ்தெடிக் மெடிசன், ஏஸ்தெடிக் காஸ்மெட்டாலஜி, பெர்மனென்ட் மேக்கப் இன் காஸ்மெட்டாலஜி, கிளினிக்கல் காஸ்மெட்டாலஜி, டிரைக்காலஜி ஃபெல்லோஷிப் மற்றும் கிளினிக்கல் காஸ்மெட்டாலஜி மற்றும் டிரைகாலனியில் முதுகலை டிப்ளமோ பயிற்சிகள் அளிக்கிறோம்.

பாராமெடிக்கல் பிரிவில் காஸ்மெட்டாலஜியில் ஃபெல்லோஷிப், டிரைக்காலஜி, கிளினிக்கல் காஸ்மெட்டாலஜி மற்றும் பெர்மனென்ட் மேக்கப்பில் அட்வான்ஸ்ட் டிப்ளமோவும், பெர்மனென்ட் மேக்கப் காஸ்மெட்டாலஜியில் முதுகலைப் பட்டப்படிப்பும் பெறலாம். இந்தப் பயிற்சியினை லேப் டெக்னீஷியன், செவிலியர்கள், இயன்முறை மருத்துவர்கள், மருந்தாளர்கள் மேற்கொள்ளலாம். அதே போல் இல்லத்தரசிகள், அழகுக் கலை நிபுணர்கள், கல்லூரி மாணவர்களுக்கும் தனிப்பட்ட பயிற்சிகள் உள்ளது. இவர்களுக்கு பெர்மனென்ட் மேக்கப்பில் டிப்ளமோ மற்றும் தொழில்முறை சார்ந்த பயிற்சிகள் வழங்குகிறோம்.

மருத்துவர்கள் என்பதால், அவர்களுக்கு சருமம், தலைமுடி சார்ந்த சிகிச்சை முறைகள் பற்றி விளக்கமாக பயிற்சிகள் அளிக்கப்படும். அதாவது, சருமத்தின் வகை, அதன் செயல்பாடு குறித்து அனைத்தும் விளக்கமாக பயிற்சி அளிக்கிறோம். இதே போல் தலைமுடிக்கும் தனிப்பட்ட பாடங்கள் உள்ளது. சருமத்தை பொறுத்தவரை ஸ்கின் கண்டிஷனிங், கரும்புள்ளி, மீசோதெரபி, PRP, ஆன்டி ஏஜனிங், கெமிக்கல் பீலிங் குறித்த பயிற்சிகள் உள்ளன.

தலைமுடிக்கு ஹை ப்ரீக்வென்சி, ஸ்டெம் செல் தெரபி, மைக்ரோநீடிலிங், PRP போன்றவற்றை சொல்லித் தருகிறோம். தவிர, டெர்மல் பில்லர்ஸ், லேசர் சிகிச்சைகள், பாடி கான்டோரிங், பி.பி க்ளோ, கொரியன் கிளாசி, லிப் பிக்மென்டேஷன், மைக்ரோ பிளேடிங் போன்ற பயிற்சிகளும் உள்ளது.பாராமெடிக்கல் பயிற்சியில் மைக்ரோ பிளேடிங், மைக்ரோ பிக்மென்டேஷன், ஸ்கால்ப் பிக்மென்டேஷன், LED தெரபி, கரும்புள்ளி, ஆன்டி ஏஜனிங், மெலஸ்மா, டெர்மா ரோலர், கெமிக்கல் பீல், தலைமுடி மற்றும் சருமத்திற்கான லேசர் சிகிச்சைகள், கார்பன் பீல்ஸ், மரு நீக்கம், ஹைட்ரா ஃபேஷியல், கொரியன் கிளாசி ஸ்கின், லிப் நியட்ரலைசேஷன் பயிற்சிகள் உள்ளன.

அழகுக் கலை நிபுணர்கள், இல்லத்தரசிகளுக்கு பெர்மனென்ட் மேக்கப் குறித்த பயிற்சி அளிக்கிறோம். இதில் ஹைட்ரா ஃபேஷியல், சருமத்திற்கான அல்ட்ரா சவுண்ட், பியூட்டி பீல்ஸ், மெடி ஃபேஷியல், புருவத்திற்கான மைக்ரோ பிக்மென்டெஷன், தலைமுடிக்கு மைக்ரோ நீடிலிங், பிபி க்ளோ போன்ற சிகிச்சை முறைகளை சொல்லித் தருகிறோம்’’ என்றவர் அழகியல் குறித்தும் அதில் செய்யப்படும் பெர்மனென்ட் மேக்கப் பற்றியும் விவரித்தார்.

‘‘அழகுக் கலை மற்றும் அறிவியலை இணைத்து ஒருவரின் சருமம் மற்றும் தலைமுடியினை அழகாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றி அமைப்பதுதான் அழகியல். இன்றைய எதிர்காலம் அழகியல் என்பதால் டாக்டர்கள் உட்பட பலரும் இப்பயிற்சியினை எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அதனாலேயே ஒருவரின் படிப்பிற்கு ஏற்ப பாடத்திட்டங்களை அமைத்திருக்கிறோம். பயிற்சிக்கு பிறகு எழுத்து மற்றும் நடைமுறை தேர்வும் உண்டு. மாணவர்களுக்கு சிகிச்சைக்கான இயந்திரங்களை முறையாக கையாளும் பயிற்சியினை அளித்து அவர்களை முழுமையான அழகியல் நிபுணராக உருவாக்குகிறோம்.

இதில் மைக்ரோ நீடிலிங், பிபி க்ளோ சிகிச்சை, கொரியன் கிளாசி, மைக்ரோ பிக்மென்டேஷன், லிப் பிக்மென்டேஷன், லிப் நியூடிரலைசிங், ஹைட்ரா ஃபேஷியல், PRP, ஹை ப்ரீக்வென்சி, ப்யூட்டி பீல், ஸ்கால்ப் பிக்மென்டேஷன், சருமத்திற்கான மீசோதெரபி மற்றும் LED தெரபி, ஆன்டி ஏஜிங் சிகிச்சை, லேசர் சிகிச்சைகள், ஐப்ரோ மைக்ரோ பிளேடிங், மெடி ஃபேஷியல் என பல சிகிச்சை முறைகள் உள்ளன. மருத்துவர்கள், பாராமெடிக்கல், இல்லத்தரசிகள், அழகுக்கலை நிபுணர்களுக்கு என தனிப்பட்ட பாடத்திட்டங்களை அமைத்திருக்கிறோம்.காரணம், மருத்துவர்கள் செய்யக்கூடிய சிகிச்சை முறைகளை அழகுக்கலை நிபுணர்களோ இல்லத்தரசிகளோ செய்ய முடியாது. அதனால் ஒவ்வொருவருக்கும் ஏற்ப தனிப்பட்ட பாடங்களை பின்பற்றுகிறோம்.

பொதுவாக பெண்கள் வெளியே செல்லும் போது மேக்கப் இல்லாமல் செல்வதில்லை. அதிகம் இல்லை என்றாலும், காம்பாக்ட் பவுடர், புருவ திருத்தம் மற்றும் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்கிறார்கள். இவை முகம் கழுவியதும் நீங்கிவிடும். முகம் கழுவினாலும் சருமம் பளிச்ெசன்றும், புதுப்பொலிவுடன் இருக்க செய்வதுதான் பெர்மனென்ட் மேக்கப். இந்த சிகிச்சையினை முறையாக எடுத்துக் கொண்டால் ஐந்து வருடம் வரை சருமம் பளபளப்பாகவும், பொலிவுடனும் இளமையாகவும் இருக்கும். காரணம், சருமத்தில் உள்ள கொலாஜனை இயற்கை முறையில் ஊக்குவித்து, ரத்த ஓட்டத்தினை அதிகரிக்க செய்யும்.

சிலருக்கு புருவங்கள் இருக்காது. அப்படியே இருந்தாலும் அடர்த்தியாக இருக்காது. ஒருவரின் புருவங்களை அழகாகவும் அடர்த்தியாகவும் மைக்ரோ பிளேடிங் மூலம் செய்யலாம். ஏற்கனவே உள்ள புருவங்களுக்கு இடையே பிக்மென்டேஷனை நிரப்பும் போது பார்க்க அடர்த்தியாக இருக்கும். இது முகம் கழுவினால் மறையாது. ஐப்ரோவிற்கு மை தீட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. புருவங்களுக்கு இடையே சிகிச்சைகளை மேற்கொள்வதால், ஏற்கனவே இருக்கும் புருவ அமைப்பினை பாதிக்காது.

இன்று பலருக்கும் கொரியன் சருமம் போன்று வழவழப்பாகவும், பளபளப்பாகவும் வேண்டும் என்று நினைக்கிறாங்க. அவர்களின் சரும அமைப்பு போல் நம்முடையது இருக்காது என்றாலும், நம் சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் அமைக்க முடியும். பிபி க்ளோ செய்து கொண்டால் மேக்கப் போடுவதற்கான அவசியம் இருக்காது. நம் சரும நிறத்திற்கு ஏற்ப தாவரங்கள் கொண்டு தயாரித்த பிக்மென்டேஷனை ஊசிகள் கொண்டு சருமத்தில் செலுத்துவோம். அவை சருமத்திற்குள் ஊடுருவி சென்று கொலாஜினை அதிகரித்து, இறந்த செல்களை நீக்கி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் சருமம் புத்துயிர் பெற்று பொலிவடையும்.

இந்த சிகிச்சையில் சருமத்தின் பொலிவினை மட்டுமில்லாமல், சருமத்தின் நிறத்தினையும் சரி செய்யலாம். விட்டிலிகோ பிரச்னை உள்ளவர்களுக்கு இது சிறந்ததாக அமையும். காரணம், 78 வகையான நிறமிகள் இருப்பதால், அவரவர் சருமத்தின் நிறத்திற்கு ஏற்ப அதனை செலுத்தி சருமத்தை பொலிவடைய செய்யலாம். சருமம் மட்டுமில்லாமல் உதட்டின் நிறத்தையும் மாற்றி அமைக்கலாம். சிலருக்கு உதடு கருமையாக இருக்கும்.

அதில் நிறமிகளை செலுத்தினால், லிப்ஸ்டிக் போட்டது போல் அவர்களின் உதட்டின் நிறம் மாறும். இவை தவிர மருக்களை நீக்கலாம், தலைமுடி வளர மைக்ரோநீடிலிங் செய்யலாம், கெமிக்கல் பீலிங் செய்வதன் மூலம் சருமத்தை வழவழப்பாக்கலாம். இந்த சிகிச்சைகளை மேற்கொள்வதினால், பிரச்னை ஏற்படும் என்று பயப்பட தேவையில்லை. காரணம், PMU அறுவை சிகிச்சை கிடையாது. நம் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தினை இயற்கை முறையில் ஊக்கப்படுத்தும் டெக்னிக். அதே சமயம் இதனை முறையாக பயிற்சி பெற்றவர்களிடம்தான் செய்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் சருமத்தில் தழும்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் பல சிகிச்சை முறைகள் இருப்பதால், ஒருவரின் தேவைக்கு ஏற்ப செய்து கொள்ளலாம்.

அழகியல் பயிற்சி பெண்கள் மட்டுமில்லை ஆண்களும் கற்றுக் கொள்ளலாம். இந்த துறையில் சிம்பிளான சிகிச்சையினை முறைப்படி கற்றுக் கொண்டாலே அவர்கள் மாதம் கை நிறைய சம்பாதிக்க முடியும். குறைந்த முதலீடு... அதிக லாபம் தரக்கூடிய பயிற்சி. இந்த துறையில் சாதிக்க நினைக்கும் அனைவருக்கும் பயிற்சி அளிக்க நான் தயாராக இருக்கிறேன்” என்றார் பயிற்சி மையத்தின் நிறுவனரான கன்னியம்மாள் வெங்கடேசன்.

தொகுப்பு: நிஷா

 

Advertisement

Related News