ஒரு இதழ் செம்பருத்தி மகிமை!
நன்றி குங்குமம் தோழி
Advertisement
* செம்பருத்தி பூ சாற்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடிகட்டி தினமும் தலைக்கு தேய்த்து வர முடி கருமையாக அடர்த்தியுடன் வளரும்.
* காலையில் வெறும் வயிற்றில் 1 டம்ளர் பாலுடன் பனைவெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, ஐந்து பூவினை சேர்த்து வடிகட்டி குடித்தால் இதயம் சம்பந்தமான மூச்சு வாங்குதல், படபடப்பு போன்ற வியாதிகள் குணமடையும்.
* செம்பருத்தி பூவினை அரைத்து முகத்தில் பூசினால் முகம் பொலிவு பெறும்.
* செம்பருத்தி இலையுடன் வெந்தயம் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு குணமாகி விடும்.
தொகுப்பு: டி.சாந்தி நடராஜன், கன்னியாகுமரி.
Advertisement