தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உன்னத உறவுகள்

நன்றி குங்குமம் தோழி

அன்புடன் ஆதரிக்கும் உறவுகள்

உறவுகள் எவ்வளவோ பேர் இருந்தாலும், ஒரு சில பேரிடம் நம் மனதிலுள்ள கஷ்டங்களை பகிர்ந்து கொள்ள நினைப்போம். எல்லோரிடமும் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள முடியாது. சிலர் நாம் சொல்வதை கேட்டு விட்டு ‘அப்படியா’ என்று ஒரு ஆச்சரியமான முகபாவனையை தருவர். சிலர் மனமுவந்து உதவ முன் வருவர். ஒரு சிலர் தன் பிரச்னை போன்று பாவித்து, ரகசியம் காத்து,பரிகாரமும் செய்ய முன் வருவர். அப்படிப்பட்டவர்களிடம் நாம் எதையும் பகிர்ந்துக்கலாம் என்று நமக்குத் தோன்றும். அத்தகைய அன்பான உறவினர்கள்தான் நம்மையும் அரவணைப்பார்கள். ‘மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான்’ என்பார்கள். அதனால்தானோ என்னவோ, நம் ஒவ்வொருவரிடமும் நல்ல குணங்களும் நிறைய இருக்கும். நமக்கே தெரியாமல் சில பிடிக்காத குணங்களும் இருக்கலாம்.

பொதுவாக, நாம் ஒவ்வொருவரிடமும் காணப்படும் குணங்களில் நல்லனவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு மனிதர்களை மதிப்போம். சில பேர் கோபக்காரர்கள் போன்று இருப்பர். ஆனால் அவர்களுக்கு நல்ல மனம் இருக்கும். ஒருவர் செய்கைகளை வைத்து நல்லவர் என்று தீர்மானிக்கலாமே தவிர, பார்த்த மாத்திரத்தில் இவர் இப்படிப்பட்டவர் என்று கணிப்பது சரியாகாது. அப்படிப்பட்ட உறவினர்களில் சிலர் நம்மை கண்டிப்பர். அதனால் அவர்கள் தீயவர் ஆகமாட்டார். நம்மிடம் இருக்கும் அக்கறையில், நம்மை சரியான வழிக்கு நடத்திச் செல்வதற்காகக்கூட கண்டிப்பாக இருப்பது போன்று காட்டிக் கொள்வர். அப்படிப்பட்ட உறவுகளில் அப்பாவின் உடன் பிறப்பாகும் சகோதரி அதாவது, அத்தை, அம்மாவின் உடன் பிறப்பாகும் சகோதரி சித்தி போன்றவர்களும் அடங்குவர்.

நேரிடையான ரத்த உறவுகள் என்பதால் இயற்கையாகவே தன் உடன் பிறப்புகளின் வாரிசுகளிடம் இவர்களுக்கு அதிகமான பாசம் ஏற்படும். சமீபத்தில் ஒரு விபத்து பற்றி அறிய நேர்ந்தது. மூன்று வயது சிறுமியுடன் தாயும் தந்தையும் ‘பைக்’கில் சென்றிருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக வேகமாக வந்த வண்டி மோத, தாய்-தந்தை சக்கரத்தின் அடியில் மாட்டிக் கொள்ள, குழந்தை மட்டும் தப்பித்துக் கொண்டது. தனியாக அழுது கொண்டிருந்த குழந்தையை அங்குள்ளவர்கள் அழைத்துச் சென்று சாப்பாடு கொடுத்து, போலீஸிடம் ஒப்படைத்தார்கள்.

அடிபட்டவர் கைப்பேசியை போலீசார் எடுத்து அதிலுள்ள எண்களை அழைத்து அடிபட்ட விபரத்தைக் கூறினார். வேண்டியவர்கள் அனைவரும் கூடி, குழந்தையை தங்களுடன் அழைத்துச் செல்ல விரும்பினர். குழந்தை யாரிடமும் செல்லவில்லை. தன் அம்மாவின் சாயலில் காணப்பட்ட சித்தியை ேநாக்கிச் சென்றது. அதே போல் மிகவும் வசதியான தம்பதியினர். அவரின் மனைவி பிரசவத்தில் குழந்தையுடன் இறந்துவிட்டார்.

அவரும் வேறு திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரின் மனைவிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அவரும் தவறிவிட்டார். சில மாதத்தில் தந்தையும் இறந்துவிட, அவரின் குழந்தையை அவரின் மனைவியின் தங்கை தான் வளர்த்துள்ளார். அம்மா இறந்து விட்டாள் என்கிற விஷயம் கூட தெரியாமலே அவ்வளவு பாசமாக அந்தக் குழந்தையை வளர்த்தார் சித்தி. இது போல் எத்தனையோ நிகழ்வுகளைக் கண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட உறவுப் பாலங்கள் தாய்-தந்தை இடத்தையே நிரப்பியிருக்கிறதென்றால், நம் உறவினர்கள் கண்டிப்பாக நம்மை தாங்கிப்பிடிக்கும் தூண்கள் என்றுதான் கூற வேண்டும்.

பிற வீட்டிலிருந்து வந்த அண்ணி மாதிரி உறவுகள் எத்தனை செய்தாலும், உலகம் அதை பாராட்டுமா? சரியாக எடுத்துக் கொள்ளுமா என்பது கேள்விக்குறிதான். சில உறவுகள் பெயரே நமக்கு ஒரு வித்தியாசத்தைக் காட்டுவது ேபான்று உணர்வு ஏற்படும். அந்தக் காலத்திலிருந்தே மாமியார்-நாத்தனார் போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. இந்த உறவைச் சொல்லி அறிமுகம் செய்யும் பொழுது சில வித்தியாசமான உணர்வுகளை நாம் அறிய முடிகிறது. அத்தை, சகோதரி என்று சொல்லும் பொழுது உறவுகள் பலப்படுவது போன்று இருக்கும். இத்தகைய வித்தியாச உறவு முறைகள் வேண்டாம் என்பதற்காக, மேலை நாடுகளில் வயது வித்தியாசமின்றி அனைவரையும் பெயர் சொல்லி அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

குழந்தை பிறந்து, பெயர் வைக்கும் போதே ‘அத்தைக் காப்பு போடுதல்’ என்று சொல்வார்கள். அத்தை வாங்கித் தரும் ‘காப்பு’தான் முதன் முதலில் குழந்தைக்குப் போடும் அணிகலன் என்றே சொல்லலாம். எவ்வளவு ஏழையாக இருந்தாலும், தான் முதலில் காப்பு கொலுசு போட்டே தீரவேண்டும் என்பதற்காக ரொம்பவும் பிரயத்தனப்பட்டு செய்வார்கள். வசதி படைத்தவர்கள் கால் ‘தண்டை’ முதல் ‘அரணாக்கயிறு’ வரை வெள்ளியில் செய்து போடுவார்கள்.

குழந்தையின் முதல் சடங்கு ஆரம்பிப்பது முதல் அத்தை உறவு என்பது பலப்பட்டுக் கொண்டே இருக்கும். திருமணத்தில் ஊஞ்சல் சடங்கு என்று சொல்வார்கள். சில குடும்பங்களில் அந்த சமயம் மணப் பையனுக்குக்கூட கண்ணில் ‘மை’ வைப்பார்களாம். அது அத்தை ஆசையுடன் வைக்கும் மையாகுமாம். கண்களில் இடுவதுடன், திருஷ்டிப் பொட்டும் கண்ணத்தில் வைப்பார்கள். அத்தை கணவர் இல்லாதவராக இருந்தால், அத்தை உறவு முறை கொண்ட வேறு உறவினர்கள் செய்வார்கள்.

அந்தக் காலத்தில் ஒரு சில காரணங்களைக் கொண்டு, பெரியோர்கள் உறவு முறைகளுக்குள் நெருக்கமான பந்தத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். அதிலும் ஆண்டு அனுபவித்தவர்களென்றால், அவர்கள் கைராசி வம்சம் பெருகும் என்றெல்லாம் கூறி வந்தார்கள். அத்தை பொட்டு அமையாவிடில், மாமி கூட ஆசையுடன் செய்ய முன் வருவார்கள். ஒரு புது குடும்பத்தை உருவாக்கித் தருவதற்கு உறவினர்கள் போட்டி போட்டுக் கொண்டு முன் வந்தார்கள்.

நல்ல ஒரு திருமணத்தை நடத்தித் தருவதன் மூலம் நல்ல காரியம் செய்வதில் தனக்கும் சிறிய ஒரு பங்காவது கிடைத்ததே என்கிற ஆத்ம திருப்தி அடைந்தார்கள். ‘ஊர் கூடி தேர் இழுப்பது’ என்பார்கள். அது போல்தான் உறவுகள் ஒன்று கூடி ஒரு புது குடும்பத்தை ஏற்படுத்தி தருவதற்காக தங்களால் இயன்றதை செய்து வந்தார்கள். எங்கேயோ ஒரு மூலையில் சில உறவுகள் உதவாமல் கூட போகலாம். அதற்காக உறவுகளே மோசம் என்று சொல்லவே கூடாது. ஒரு கிலோ தக்காளியோ, வெண்டைக்காயோ வாங்கினாலும், ஒன்றிரண்டு கெட்டுப் போவது முதல், ஒரு சிலர் ஒத்துப் போகாமல் இருக்கலாம். ஆனால் பாசத்தைக் கொட்டி நம் மீது அன்பு மழை பொழியும் உறவுகளை நம்மால் என்றுமே மறக்க முடியாது.

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீ நிவாசன்