தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

என் குழந்தைகளே என் முன்னோடிகள்!

நன்றி குங்குமம் தோழி

கள்ளம் கபடம் ஏதுமறியா குழந்தைகள் உலகமே வேறு. தற்போது செல்ஃபோன்களே குழந்தைகளின் குதூகல உலகமாக மாறி உள்ளன. பெருகிவிட்ட ஸ்மார்ட்ஃபோன் புரட்சியால் வீடுகளிலும் தினம் தினம் செல்ஃபோன் சண்டைகள்தான். ஆடம்பரம் என்பது மாறி செல்ஃபோன் அத்தியா வசியமாகிவிட்டது. ஆனால், அதுவே குழந்தைகளுக்கு தீங்கினை ஏற்படுத்த ஒரு காரணமாக மாறிவருகிறது. பெருகி வரும் செல்ஃபோன் பயன்பாட்டால் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அதனால் ஏற்படும் பாதிப்பு அதிகமாகிறது என்கிறது ஆய்வு. குறிப்பாக குழந்தைகள் இளம் வயதிலேயே உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகள் ஒரே இடத்தில் உட்கார்ந்து ஸ்மார்ட்ஃபோன்களைப் பார்ப்பதாலும், அதில் விளையாடுவதாலும், அவர்களின் கண் பார்வை, மூளைத்திறன் பாதிக்கப்படுகிறது. மேலும் உடல் பருமனாலும் அவதிப்படுகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.செல்ஃபோன் வரவிற்கு முன்பு வரை குழந்தைகள் வீட்டுக்கு வெளியேதான் விளையாடி பொழுதைக் கழித்தனர்.

ஆனால், மாறி வரும் சமூக சூழலால், பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிப்பதில்லை. குழந்தைகள் அமைதியாக ஓரிடத்தில் உட்கார்ந்தாலே போதும் என்ற மனநிலையிலேயே பெற்றோர்கள் பெரும்பாலும் இருக்கின்றனர். இச்செயலால் அவர்களுக்கு உடல், மன ரீதியான பிரச்னைகள் உருவாகின்றன என்பதை பெற்றோர்கள் அறிவதில்லை. “எங்கள் குழந்தைகளை செல்ஃபோனில் விளையாட அனுமதிப்பதில்லை. அவர்கள் வேறு விளையாட்டுகளில் கவனம் செலுத்த வேண்டும், வித்தியாச மான விளையாட்டுப்பொருட்களை வாங்கித் தர வேண்டும் என்ற எனது தேடுதலே “ஃபார் கிட்ஸ்” உருவாகக் காரணம். என் குழந்தைகளே என் முன்னோடிகள்” என்று தன் ஈ-காமர்ஸ் பயணத்தைப் பற்றி விவரிக்கிறார் ரேணுகா அருண்.‘‘சொந்த ஊர் ஈரோடு. 19 வயதில் திருமணம். இரண்டு குழந்தைகள். கணவர் ரியல் எஸ்டேட் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் தொழில் செய்கிறார். பாதியில் படிப்பை விட்டாச்சு. எனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்பது நெடுநாள் விருப்பமாக இருந்தது. என் பசங்க விளையாட பொம்மைகளைப் பார்த்து பார்த்து வாங்குவேன். ஆன்லைன்லயும் பார்த்து வாங்குவேன்.

அதையே பிசினஸாக செய்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. ஆன்லைனில் பொம்மைகளை விற்பனை செய்ய திட்டமிட்டு 2023ல் ‘ஃபார் கிட்ஸ்’ ஆரம்பித்தேன். எனக்கு ஆன்லைனில் பொருட்களை வாங்க மட்டும்தான் தெரியும். ஆனால், அதில் எவ்வாறு பதிவுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று தெரியாது. தனியாளாக போட்டோ, வீடியோக்களை நானே எடுத்து பதிவு செய்ேதன். சற்று சிரமமாக இருந்தது. தினம் புது விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஒரு வீடியோ அதிகளவில் பார்க்கப்பட்டால் அது குறித்து வாடிக்கையாளரிடம் எப்படி பேசுவது, ஸ்டாக்ஸ்களை எப்படி கையாள்வது, புதுப் பொருட்களை எப்படி அறிமுகப்படுத்துவது என்ற நுணுக்கங்களை படிப்படியாக தெரிந்து கொண்டேன். தனியாளாக தொடங்கிய பயணம் இன்று என்னிடம் ஐந்து பெண்கள் உடன் வேலை செய்கிறார்கள்’’ என்றவரின் ஒரு வைரல் வீடியோதான் அவருக்கான அடையாளத்தினை ஏற்படுத்திஉள்ளது. ‘‘கேரளா செல்லும் ஒரு வாடிக்கையாளருக்கு இரவு 12 மணிக்கு அவசரமாக ஈரோடு ரயில்வே ஜங்சனில் பொருட்களை டெலிவரி செய்தோம். அதை முதன்முதலா வீடியோவாக பதிவு செய்தேன். அது வைரலாகும்னு நான் நினைக்கல.

ஏழாயிரமாக இருந்த ஃபாலோவர்ஸை அறுபதாயிரமாக மாற்றியது. அதன் பிறகு ஆர்டர்களும் வரத் துவங்கின. அதனைத் தொடர்ந்து பிசினஸ் குறித்து நிறைய வீடியோக்களை பதிவு செய்ய ஆரம்பித்தேன்.நான் இந்த பிசினஸ் ஆரம்பிக்க முக்கிய காரணமான என் குழந்தைகளுக்காக பொம்மைகளை பார்த்து பார்த்து வாங்குவேன். அதனால் மற்ற குழந்தைகளுக்கும் தரமான பொருட்களை சரியான விலையில் கொடுக்க விரும்பினேன். என்னிடம் அந்த வகையில் பொம்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாடிக்கையாளர்கள் நம்மை அணுக வேண்டும் என்ற எண்ணத்துடனே ஆரம்பிச்சேன். குழந்தைகளுக்கான டாய்ஸ், கல்வி சார்ந்த விளையாட்டுப் பொருட்கள், வாட்டர் பாட்டில், லஞ்ச் பாக்ஸ், டவல்கள் என பலவற்றை விற்கிறோம். பொருட்களில் குழந்தைகளின் பெயரினை பதிவிட்டு கஸ்டமைஸ் செய்தும் தருகிறோம். வளைக்காப்பு, திருமணம், பிறந்தநாள் போன்ற விழாக்களுக்கும் கஸ்டமைஸ் செய்கிறோம். தற்போது அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பல பொருட்கள் உள்ளன.

குழந்தைகளை எந்த விதத்திலேயும் பாதிக்காத மரத்தாலான விளையாட்டுப் பொருட்கள் என அனைத்தும் உயர்ந்த தரம் வாய்ந்த பொருட்களையே விற்பனை செய்கிறோம். எங்க பொம்மைகள் குழந்தைகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு தரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். காரணம், என் குழந்தைகளும் இந்த பொம்மைகளை வைத்துதான் விளையாடுகிறார்கள். அதேபோல் குழந்தைகள் பயன்படுத்தும் லஞ்ச் பாக்ஸ், சூப் கப், வாட்டர் பாட்டில் எல்லாம் தரமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆனவை. அதனால் உணவுகள் 3 மணி நேரம் வரை சூடாகவும், கெட்டுப் போகாமல் இருக்கும். இந்த இன்சூலேட்டடு லஞ்ச் பாக்ஸுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது’’ என்றவர், கல்வி சார்ந்த உபகரணங்களும் விற்பனை செய்து வருகிறார்.‘‘எங்களின் கல்வி சார்ந்த உபகரணங்கள் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வார்த்தைகளை உச்சரிப்பது, மிருகங்களின் ஒலி போன்ற உபகரணங்கள் குழந்தைகளை எளிதில் கவரும் வண்ணம் உள்ளது. வுட்டன் பசில்ஸ், 2 இன் 1 லுடோ செட், ஹாக்கி செட்டும் பிரபலம். தற்போது அம்மாக்களுக்கு தேவையான துணியால் ஆன ஹேண்ட்பேக், பர்ஸ், டிராவல் பேக், டவல் போன்றவையும் வெகுவாக கவர்ந்து வருகின்றன. ஆன்லைன் பிசினஸ் பொறுத்தவரை எப்போ ஆர்டர்கள் வரும் என்று சொல்ல முடியாது. 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் மெசேஜ் அனுப்பியவுடன் பதிலை எதிர்பார்ப்பார்கள். எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும். எங்கள் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பொருட்களை வழங்க வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய நோக்கம். கூடிய விரைவில் இதனை கடையாக மாற்ற இருக்கிறேன். நமக்கான அடையாளத்தை நாம்தான் உருவாக்க வேண்டும். அதை நான் உருவாக்கி இருக்கிறேன்’’ என்றவர் ஈ-காமர்ஸ் விஷனரி விருதினை பெற்றுள்ளார்.

தொகுப்பு: கலைச்செல்வி