மழைக்கால சருமப் பராமரிப்பு!
வாசகர் பகுதி
நன்றி குங்குமம் தோழி
மழைக்காலம் தொடங்கிவிட்டது. இதனால் ஏற்படும் வானிலை மாற்றங்களால் நம் உடலில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். காரணம், இந்த நேரத்தில் சருமம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். இந்தப் பருவத்தில் சருமம் மிகவும் ஈரமாக அல்லது வறண்டு காணப்படும். விளைவு சொறி, கொப்புளங்கள் மற்றும் பருக்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படும். மழைக்காலத்தில் சருமத்தை பராமரிக்க சில வீட்டு வைத்தியங்களை தெரிந்து கொள்ளலாம்.
* எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு மழைக்காலத்தில் சருமம் தொடர்பான சிக்கல்கள் ஏற்படும். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். பருவ மழையில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, வாரத்திற்கு இரண்டு முறையாவது முகத்தை ஸ்க்ரப் செய்ய வேண்டும். அதோடு, உங்கள் முக ஒப்பனையில் மாய்ஸ்
சரைசரை பயன்படுத்துவது நன்மை அளிக்கும். மேலும், ஜெல் வடிவ சன் ஸ்கிரீமை தவிர்ப்பது நல்லது.
* வறண்ட சருமம் கொண்டவர்கள் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். காரணம், வறண்ட சருமம் ெகாண்டவர்களுக்கு ஆரோக்கியமான நீரேற்றம் அவசியம்.
* சென்சிட்டிவான சருமம் உள்ளவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினம். இந்த வகை சருமம் வறண்டதாகவுமில்லை, எண்ணெய் நிறைந்ததாகவுமில்லை. இது போன்ற சருமத்தில் பெரும்பாலும் மூக்கு, கன்னம் மற்றும் நெற்றியில் அதிக எண்ணெய் பசை காணப்படும். முகத்தின் மற்ற பகுதியில் வறண்ட தோற்றமளிக்கும். இவர்களுக்கு அதிக பராமரிப்பு அவசியம். மாய்ஸ்சரைசரை அவ்வப்போது பயன்படுத்த வேண்டும். சன்ஸ்கிரீமை தவிர்க்க வேண்டும்.
தொகுப்பு: கவிதா பாலாஜிகணேஷ், சிதம்பரம்.